பார்ட்டியில் நேருக்கு நேர் சந்தித்து கொண்ட தனுஷ்-ஐஸ்வர்யா… நடந்தது என்ன?
சென்னை: விவாகரத்து முடிவுக்கு பின் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா, நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவர்களை மீண்டும் இணைக்க இரு குடும்பத்தினரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.
ரஜினிகாந்தின் விருப்பத்தை ஏற்று மீண்டும் தனுஷுடன் இணைய ஐஸ்வர்யா தயாராக இருப்பதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகிறது.

தனுஷ், ஐஸ்வர்யா
மனம் ஒத்த நட்சத்திர தம்பதிகளாக இருந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக கடந்த மாதம் இணையத்தில் அறிவித்து இருந்தனர். 18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

பல வதந்திகள்
இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக முடிவு செய்துள்ளோம் என ஒரே மாதிரி கருத்தை பதிவிட்டு பிரிந்தனர். இவர்களின் பிரிவு அறிவிப்பு சினிமா வட்டாரத்திலும் அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனுஷ்,ஐஸ்வர்யா பிரிவுக்கு காரணம் தெரியாததால், இணையத்தில் பல்வேறு வதந்திகள் பரவின. இருப்பினும் பிரிவுக்கான காரணம் குறித்து இருவரும் மௌனம் காத்து வருகின்றனர்.

சந்தித்துக்கொள்ளவில்லை
திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் தனுஷ் தற்போது வாத்தி, திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் பிஸியாக இருக்கிறார். அதேபோல ஐஸ்வர்யாவும் ஆல்பம் பாடலை இயக்குவதில் தீவிரம் காட்டி வருகிறார். இவர் இயக்கிய ஆல்பம் சாங் காதலர் தினத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. வாத்தி பட ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத்தில் தனுஷூம், ஆல்பம் பாடல் வேலைக்காக சென்றிருந்த ஐஸ்வர்யாவும் ஒரே ஓட்டலில் தங்கியிருந்தனர். இவர்கள் சந்தித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இருவரும் சந்தித்துக்கொள்ளவே இல்லை.
Recommended Video

நேருக்கு நேர் சந்தித்தும் பேசவில்லை
இந்நிலையில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஒரே பார்ட்டிற்கு சென்றுள்ளனர். ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டபோதும் எதுவுமே பேசாமல் கடந்து சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டால் மனக்கசப்பு நீக்கி இருவரும் சேர்ந்து விடுவார்கள் என எதிர்பார்த்த நண்பர்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. காலம் கனிந்து நிச்சயம் இவர்கள் இருவரும் இணைவார்கள் என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிவட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications