’அமரன்’ இயக்குனர் இயக்கத்தில் தனுஷ்.. பரபரப்பாக நடக்கும் ஷூட்டிங்கில் மம்மூட்டி வேற.. செம சீன்!
சென்னை: போர் தொழில் படத்தை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'கர' திரைப்படம் அடுத்த மாத இறுதியில் திரைக்கு வருகிறது. அந்த படத்தை முடித்து விட்டு தனுஷ் யாருடைய இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்கிற கேள்வி எழுந்த நிலையில், தனுஷ் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார்.
லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, மாரி செல்வராஜ் உள்ளிட்ட இயக்குனர்கள் லைன் கட்டி காத்திருக்க அமரன் பட இயக்குநர் படத்தை முடித்து விட்டுத்தான் அடுத்த படத்தில் தனுஷ் நடிப்பார் என தெரிகிறது.

சென்னையை அடுத்து செங்குன்றத்தில் உள்ள வெங்காய குடோனில் தற்போது தனுஷ் மற்றும் மம்மூட்டி நடித்து வரும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
300 கோடி அமரன்: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான முதல் படம் கெளதம் கார்த்திக் நடித்த ரங்கூன். நல்லா இருந்தாலும் அந்த படம் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பெறவில்லை. அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சிகளை பல ஆண்டுகள் இயக்கி வந்தார் ராஜ்குமார் பெரியசாமி. அப்படியே கமல் தயாரிக்க சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிக்க அமரன் படத்தை இயக்கி ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் பாராட்டும்படி ஒரு படத்தைக் கொடுத்து 300 கோடி பாக்ஸ் ஆபீஸ் வேட்டையை நடத்தி மாஸ் காட்டினார்.
தனுஷ் உடன்: சிவகார்த்திகேயனுக்கு அமரன் படத்தைக் கொடுத்த ராஜ்குமார் பெரியசாமி தற்போது தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா நடிக்கும் D55 படத்தை இயக்கி வருகிறார். கர படமே தனுஷுக்கு இந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அமரன் இயக்குநர் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் படத்தைக் கொடுக்க கடுமையாக உழைத்து வருகிறார்.
தனுஷ் - மம்மூட்டி இணைந்து: இந்நிலையில், செங்குன்றம் அலமாதி பகுதியில் உள்ள வெங்காய குடோன் ஒன்றில் தனுஷ் மற்றும் மம்மூட்டி இருவரும் இணைந்து நடிக்கும் செம சீன் ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது. போலீஸ் வேடமணிந்தவர்கள், செவிலியர்கள், வெங்காய குடோனில் வேலை பார்க்கும் ஆட்கள் என பலரும் இந்த காட்சியில் நடித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும், சில சண்டைக் காட்சிகளையும் எருமைவெட்டிப் பாளையம், ஏரிக்கரை ஓரங்களில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படத்தை முடிக்க ராஜ்குமார் பெரியசாமி திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











