தனுஷுக்கும் மிருணாள் தாகூருக்கும் இத்தனை வயது வித்தியாசமா? ரெண்டு பேரும் ஒரே ராசி வேறையா?

மும்பை: நடிகை மிருணாள் தாகூர் தனது தனிப்பட்ட வாழ்க்கையை எப்போதும் மறைத்தே வைத்துள்ளார். அவரது உறவு வெளிச்சத்திற்கு வந்த ஒரே நிகழ்வு, எழுத்தாளர் ஷரத் திரிபாதியுடன் அவர் நடன நிகழ்ச்சி "நச் பலியே சீசன் 7" இல் பங்கேற்றபோதுதான். பின்னர் அவர்கள் பிரிந்துவிட்டனர்.

தற்போது, தனுஷுடன் மிருணாள் காதலில் இருப்பதாக வதந்திகள் பரவி வரும் நிலையில், அவர் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். தனுஷ், ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை மணந்திருந்தார். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

Dhanush and Mrunal Thakur age gap difference debate in social media by fans

சமீபத்தில், தனுஷும் மிருணாளும் பேசிக்கொண்டு, கைகளைப் பிடித்துக் கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து, இருவரும் காதலிக்கிறார்கள் என்று நெட்டிசன்கள் யூகிக்கத் தொடங்கினர்.

மிருணாள் தாகூர் மற்றும் தனுஷ் இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். தனுஷ் ஜூலை 28, 1983 அன்று பிறந்தார், அவருக்கு தற்போது 42 வயது. மிருணாள் ஆகஸ்ட் 1, 1992 அன்று பிறந்தார், அவருக்கு 33 வயது. எனவே, இருவருக்கும் இடையே ஒன்பது ஆண்டுகள் வயது வித்தியாசம் உள்ளது. சுவாரஸ்யமாக, மிருணாள் மற்றும் தனுஷ் இருவருமே சிம்ம ராசிக்காரர்கள் என்றும் கூறுகின்றனர்.

மிருணாள் தாக்கூர் மற்றும் தனுஷ் தங்கள் உறவை ரகசியமாக வைத்திருக்கிறார்களா? நியூஸ்18 அறிக்கையின்படி, தனுஷ் மற்றும் மிருணாள் ஹைதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்வில் சந்தித்தனர். அவர்கள் நண்பர்களாகி, பின்னர் காதல் மலர்ந்தது என குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இதுவரை இதுதொடர்பாக இருவரும் வெளிப்படையாக எதையும் அறிவிக்கவில்லை.

மேலும், சில வட இந்திய மீடியாக்கள், "ஆம், அவர்கள் காதலிக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் இது மிகவும் புதியது. பொதுமக்களிடமோ அல்லது ஊடகங்களிடமோ தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக்கும் திட்டம் அவர்களுக்கு இல்லை. அதே நேரத்தில், வெளியே செல்வது மற்றும் வெளிப்படையாகத் தெரிவது குறித்து அவர்கள் கவலைப்படுவதில்லை." எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வதந்திகள் உண்மையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதற்கிடையில், மிருணாள் நடித்த "சன் ஆஃப் சர்தார் 2" திரைப்படம் அண்மையில் வெளியானது. இத்திரைப்படம் திரையரங்க வசூலில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. நான்கு நாட்களில் இப்படம் ₹27.10 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. மிருணாள் தாகூரின் படத்தின் ப்ரீமியர் மற்றும் பிறந்தநாள் விழாவில் தனுஷ் பங்கேற்றது தான் இந்த வதந்தி பரவ முழு காரணம் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X