தனுஷ்கிட்ட சிம்பு என்ன கேட்டிருப்பாரு.. இப்படி சிரிக்கிறாரே.. சும்மா கதறவிட்ட நண்பேன்டா மொமண்ட்!
சென்னை: ஆயிரம் அதிசயம் அமைந்தது பாபா ஜாதகம் என்பது போல ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்தில் ஏகப்பட்ட அதிசய நிகழ்வுகள் அரங்கேறி கோலிவுட் ரசிகர்களையும் சினிமா பிரபலங்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளன. இட்லி கடை படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்தில் மறக்க முடியாத நிகழ்வுகள் பல நடந்திருக்கும் போலத் தெரிகிறது. சிம்பு மற்றும் தனுஷ் இருவரும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தை தீப்பிடிக்க வைத்துள்ளது.
நயன்தாராவின் அதிர்ச்சியூட்டும் புகார் அறிவிப்புக்குப் பிறகு கடந்த சில நாட்களாகவே தனுஷ் ஹாஷ்டேக் தான் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில், சிம்புவின் #SilambarasanTR ஹாஷ்டேக் தற்போது டிரெண்டாக ஆரம்பித்துள்ளது.

ஆகாஷ் பாஸ்கரன் திருமண வரவேற்பில் அப்படியொரு சம்பவத்தை தனுஷ் மற்றும் சிம்பு இயல்பாக செய்து முடித்துள்ளது தான் அதற்கு காரணம் என்கின்றனர்.
எக்ஸ் லவ்வரை யாருமே கேட்கல: நடிகை நயன்தாரா நெட்பிளிக்ஸில் வெளியிட்ட தனது பியாண்ட் தி ஸ்டோரி டாக்குமெண்டரி ஆவணப்படத்தில் தனது முந்தைய காதல் வாழ்க்கை குறித்து பேசாமலே இருந்திருக்கலாம் என்றும் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டதை மட்டுமே அவர் பேசியிருக்கலாம் என ஏகப்பட்ட எதிர்ப்புகள் அவர் தனது எக்ஸ் லவ்வர்களான சிம்பு மற்றும் பிரபுதேவா குறித்து பெயரை சொல்லாமல் தன்னிடம் மட்டுமே பலரும் கேள்வி எழுப்பினர். தன்னை ஏமாற்றிய எக்ஸ் காதலர்கள் குறித்து யாருமே கேட்கவில்லை என்கிற குற்றச்சாட்டை முன் வைத்ததும் சிம்பு ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ரவுண்டு கட்டத் தொடங்கி விட்டனர்.

திருமணத்துக்கு வரல: ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்துக்கு நயன்தாரா வருவதால் சிம்பு வரவில்லையா? அல்லது சிம்பு வரமாட்டார் எனத் தெரிந்த நிலையில், நயன்தாரா வந்தாரா என்கிற கேள்விகள் கிளம்பியுள்ளன. தனுஷ் மற்றும் நயன்தாரா இருவரும் எதிரும் புதிருமாக ஒரே ஃபிரேமில் அமர்ந்திருந்த காட்சிகளை படையப்பா ரஜினிகாந்த் மற்றும் நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன் உடன் கம்பேர் செய்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். சிம்புவும் திருமணத்துக்கு வந்திருந்தால் இன்னமும் கண்கொள்ளா காட்சியாக இருந்திருக்கும் என தற்போது ஏகப்பட்ட கமெண்ட்டுகள் பறக்கின்றன.

தனுஷிடம் சிம்பு என்ன சொல்லியிருப்பார்: தனுஷை பார்த்ததும் கட்டிப் பிடித்து பேசிய சிம்புவின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. சிம்பு ஏதோ கேட்க, உடனே அதற்கு தனுஷ் சிரிப்பிலேயே பதில் சொல்லும் போட்டோவை ஷேர் செய்து அப்படி சிம்பு தனுஷிடம் என்ன சொல்லியிருப்பார் என்றும் என்ன கேட்டிருப்பார் என்றும் ஏகப்பட்ட போஸ்ட்டுகள் அந்த ஹாஷ்டேக்கை நிரப்பி வருகின்றன.

எரியுமா? எரியாதா?: இதையெல்லாம் சிம்பு மற்றும் தனுஷுக்கு வேண்டாதவர்கள் பார்த்தால் எரியுமா? எரியாதா? என்றும் தனுஷ் மற்றும் சிம்பு ரசிகர்கள் தற்போது ட்ரோல் செய்யத் தொடங்கி விட்டனர். தனுஷ் மற்றும் நித்யா மேனன் நடித்து வரும் இட்லி கடை படத்தை தயாரித்து வரும் டான் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் விக்னேஷ் சிவனுக்கு உதவி இயக்குநராக நானும் ரவுடி தான், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். தனியாக அவரும் ஒரு படத்தை இயக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. கோலிவுட்டின் பல சினிமா பிரபலங்களை தனது திருமணத்துக்கு வரவைத்துள்ளார். அவரது நட்பின் அழைப்பை ஏற்று பலரும் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











