ரவுடி பேபி பாடலை ஓவர்டேக் பண்ண அடுத்த தனுஷ் பாட்டு ரெடி.. கிழிஞ்ச ஜீன்ஸுடன் ஸ்ரீலீலா.. லீக்?
சென்னை: அமரன் படத்தைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா நடிக்கும் புதிய படத்திற்கு 'ஓம்' என டைட்டில் வைக்கப்பட்டு சமீபத்தில் சாய் அபயங்கரின் தெறி பிஜிஎம் உடன் அறிமுக க்ளிம்ப்ஸ் வீடியோ ஃபர்ஸ்ட் ஸ்டிரைக்காக வெளியானது.
அதை பார்த்த பலரும் என்ன இது புஷ்பா படம் மாதிரி இருக்கே என கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். ஆனால், அது வெறும் முதல் சாப்டர் மட்டும் தான் என்றும் அதுவும் திருவண்ணாமலையில் நடந்த உண்மைச் சம்பவத்தின் தாக்கம் என இயக்குநர் விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், தனுஷ், ஸ்ரீலீலா நடனமாடிய பாடல் காட்சியின் சில போட்டோக்கள் இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகின்றன.
அழுகாச்சி டிராமா: ராயன், இட்லி கடை, கர என தொடர்ந்து தனுஷ் நடித்த படங்கள் எல்லாம் அதிகபட்சம் அழுகாச்சி டிராமாவாகவே உள்ளதாக தனுஷ் ரசிகர்கள் ரொம்பவே ஃபீல் செய்து வந்தனர். மாரி 2 படத்தில் சாய் பல்லவியுடன் தனுஷ் ஆடிய ரவுடி பேபி பாடல் 1 பில்லியன் வியூஸ் கடந்து மிகப்பெரிய வைரல் ஹிட் ஆனது. இந்நிலையில், அதையெல்லாம் பீட் பண்ணும் அளவுக்கு தனுஷ் ஜாலியாக நடிக்க மாட்டாரா? டான்ஸ் ஆடமாட்டாரா என நினைத்த ரசிகர்களுக்கு ஓம் படத்தில் ஓஹோவென விருந்து காத்திருக்கிறது.
அடுத்த பில்லியன் வியூஸ்: சாய் பல்லவி, ஸ்ரீலீலா என நடன புயல்கள் தனுஷ் உடன் நடிக்கும் நிலையில், ரசிகர்கள் கண்டிப்பாக பக்காவான குத்தாட்ட பாடலை எதிர்பார்ப்பார்கள் என்கிற பல்ஸை நன்கு அறிந்துக் கொண்ட ராஜ்குமார் பெரியசாமி சாண்டி மாஸ்டரை வைத்து ஒரு பக்காவான டான்ஸ் பாடலை உருவாக்கியுள்ளார். அடுத்து ஒரு பில்லியன் வியூஸை இந்த பாட்டு கண்டிப்பாக கடக்கும் என ரசிகர்கள் இப்போதே ஆருடம் சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

தனுஷ், ஸ்ரீலீலா போட்டோஸ் லீக்?: ஓம் படத்தின் அறிமுக டீசர் வெளியான நிலையில், தற்போது தனுஷ், ஸ்ரீலீலா நடனமாடும் பாடல் காட்சிகள் சில லீக்காகி வைரலாகி வருகின்றன. கிழிந்த ஜீன்ஸ் பேன்ட் உடன் ஸ்ரீலீலா டான்ஸ் ஆட ஃபங்க் வைத்த தலையுடன் தனுஷ் தாறுமாறாக ஸ்டெப் போடும் போட்டோக்களை பார்த்தே ரசிகர்கள் ஹேப்பியாகி விட்டனர். தனுஷை இப்படி பார்க்கத்தான் ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட்டிங் என்கின்றனர். அதே சமயம் இது முழுக்க முழுக்க ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்டது என்றும் ஒரிஜினல் இல்லை என்றும் சில ரசிகர்கள் கூறி வருகின்றனர். படக்குழு இது தொடர்பாக இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications