மிட் நைட் பார்ட்டி.. இத்தனை நடிகைகளுடன் தனுஷ்.. யார் யாருனு பாருங்க.. செம ஸ்மார்ட்டா இருக்காரே ப்பா
சென்னை: தனுஷின் நடிப்பில் கடைசியாக குபேரா திரைப்படம் வெளியானது. சேகர் கம்முல்லா இயக்கியிருந்த அந்தப் படம் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருந்தாலும் தமிழில் பெரிய வரவேற்பை பெறவில்லை. அதேசமயம் தனுஷின் நடிப்பை அனைவருமே பாராட்டினார்கள். அவர் இப்போது ஹிந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மெய்ன் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
தனுஷுக்கு நீண்ட இடைவெளி கழித்து திருச்சிற்றம்பலம் படம் ஹிட்டாக அமைந்தது. ஆனால் அந்தப் படத்துக்கு பிறகு வெளியான கேப்டன் மில்லர், ராயன் ஆகிய இரண்டு படங்களுமே தோல்வியைத்தான் சந்தித்தன. அதிலும் ராயன் திரைப்ப்டம் தனுஷுக்கு 50ஆவது படம் என்பதும்; அதனை அவரே இயக்கி நடிக்கவும் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 50ஆவது படத்தின் தோல்வி அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் அப்செட்டைதான் கொடுத்தது.
குபேரா தனுஷ்: சூழல் இப்படி இருக்க சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்தார். இதில் அவருடன் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா, பாக்யராஜ் என பலர் நடித்திருந்தார்கள். கண்டிப்பாக ஒரு ஹிட் தேவை என்ற நிலைமையில் இருந்த தனுஷுக்கு நிச்சயமாக இப்படம் பெரிய ஹிட் கொடுக்கும் என்றுதான் அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். அப்படிப்பட்ட ஹைப்போடு படம் சமீபத்தில் வெளியானது.

தெலுங்கில் செம ஹிட்: எதிர்பார்த்தபடியே தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது படம். ஆனால் தமிழில் அந்த ரெஸ்பான்ஸை பெறவில்லை. தனுஷின் நடிப்பை பலரும் பாராட்டினார்கள். அதேசமயம் ஏதோ ஒன்று தமிழ் ஆடியன்ஸுக்கு படத்தில் மிஸ்ஸாகிவிட்டது. அதன் காரணமாக உச்சக்கட்ட வரவேற்பை படத்துக்கு ரசிகர்கள் கொடுக்கவில்லை. அதேசமயம் தெலுங்கில் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூலிலும் பட்டையை கிளப்பியது படம்.
ஹிந்தியில் தனுஷ்: குபேரா படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மெய்ன் படத்திலும் நடித்தார் தனுஷ். இதில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார். ஏற்கனவே தனுஷ் - ஆனந்த் கூட்டணியில் வெளியான ராஞ்சனா திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி அவருக்கு ஹிந்தியில் தரமான மார்க்கெட்டை உருவாக்கியது. எனவே இந்தப் படமும் அதுபோல் ஹிட்டடித்து தனுஷுக்கு பாலிவுட்டில் ஒரு ஹிட்டை கொடுக்கும் என்று கருதப்படுகிறது.
மிட் நைட் பார்ட்டி: விறுவிறுப்பாக நடந்து வந்த அந்தப் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில்தான் நிறைவடைந்தது. அதனை தனுஷும் அறிவித்திருந்தார். இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் முடிந்ததன் காரணமாக மிட் நைட் பார்ட்டி ஒன்று மும்பையில் நடத்தப்பட்டது. இதில் தனுஷூம் கலந்துகொண்டார்.மேலும் அந்த பார்ட்டியில் கீர்த்தி சனோன், தமன்னா, மிருனாள் தாகூர், பூமி பட்னேகர், தயாரிப்பாளர் கனிகா ஆகியோரும் கலந்துகொண்டார்கள். இதுதொடர்பான புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
தனுஷுக்கு இந்தப் படம் தவிர்த்து மாரி செல்வராஜ் இயக்கத்தில், தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில், செல்வராகவன் இயக்கத்தில், இளையராஜாவின் பயோபிக் உள்ளிட்ட ஏராளமான படங்கள் இருக்கின்றன. அதுமட்டுமின்றி தானே இயக்கி இட்லி கடை என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இதில் அவருக்கு நித்யா மேனன் ஜோடி. முதலில் இப்படம் கடந்த ஏப்ரல் மாதமே வெளியாவதாக இருந்தது. ஆனால் அப்போது அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானதால் இதன் ரிலீஸ் தள்ளிப்போனது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











