ஆன்லைன் ஷாப்பிங் விளம்பரத் தூதராக தனுஷ்!
ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ஓஎல்எக்ஸின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் நடிகர் தனுஷ்.
வேலையில்லா பட்டதாரியின் வெற்றி தனுஷின் மார்க்கெட்டை பலமடங்கு உயர்த்தியுள்ளது. அடுத்தடுத்து வரவிருக்கும் அவரது இரு படங்களுமே பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்தியில் அவர் நடித்துள்ள ஷமிதாப் விரைவில் வெளியாக உள்ளது. அதற்கடுத்து தமிழில் கே வி ஆனந்த் இயக்கத்தில் அனேகன் படம் வரவிருக்கிறது.
இந்த நிலையில் தனுஷ் தற்போது ஓஎல்எக்ஸ் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆன் லைனில் பொருட்களை விற்க உதவும் இணைய தளமான ஓஎல்எக்ஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் தனுஷ் நடித்துள்ளார்.
ஏற்கனவே தலைமுடி தைலம், துணிக்கடை உள்ளிட்ட பல விளம்பரங்களில் நடித்துள்ளார் தனுஷ்.
இந்த விஷயத்தில் சூர்யாவுக்கு கடும் போட்டி தனுஷ்தான் போலிருக்கிறது!
Comments


Click it and Unblock the Notifications