'ஒன் ப்ளஸ் ஒன் டூ - யு டூ யு'... சச்சினுக்காக தனுஷின் 'பூஸ்ட் பாட்டு'!

பூஸ்ட் நிறுவனத்தின் 25 ஆண்டு கால பிராண்ட் அம்பாசடர் சச்சின். இதைக் கொண்டாடவும், சச்சினின் சாதனைகளைப் பாடவும் ஒரு பாடலை உருவாக்க திட்டமிட்ட நிறுவனம், அந்த வேலையை தனுஷிடம் ஒப்படைத்துள்ளது.
கிட்டத்தட்ட கொலவெறி பாட்டு மாதிரியே இந்த பூஸ்ட் பாட்டும் அமைந்துள்ளது.
“One plus one two-u two-u, if not sachin who-u who-u!!!" என்று ஆரம்பிக்கிறது இந்தப் பாட்டு. கொலவெறிப் பாட்டுக்கு இசையமைத்த அதே அனிருத்தான் இந்தப் பாடலுக்கும் இசை தந்துள்ளார். நடிகை அனுஷ்காவும் இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ளார்.
இதுகுறித்து தனுஷ் கூறுகைாயில், "இந்தப் பாட்டை சச்சினுக்கு ஒரு மரியாதையாக, ஒரு மாஸ் ஹீரோவுக்கான ஓபனிங் பாட்டு மாதிரி செய்துள்ளோம். ஹைதராபாத் ராமோஜிராவ் சிட்டியில் படப்பிடிப்பு நடக்கிறது," என்றார்.
பாடலை முதலில் யு ட்யூபில் வெளியிடவிருக்கிறார்கள்.
Comments


Click it and Unblock the Notifications