Dhanush D 50: VIP சென்டிமென்ட்... D 50 ரிலீஸ் தேதியை முடிவு செய்த தனுஷ்... அப்போ இதுவும் ஹிட் தான்!

சென்னை: தனுஷின் D 50 திரைப்படம் ஏப்ரல் 11ம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக ஏப்ரல் ரிலீஸில் இருந்து தள்ளிப் போவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தனுஷின் 25வது படமான விஐபி சூப்பர் ஹிட்டானது. அதே சென்மென்ட்டில் டி 50 படத்தையும் ரிலீஸ் செய்ய தனுஷ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனுஷின் D 50 ரிலீஸ் அப்டேட்
தனுஷ் தற்போது தனது 51வது படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக காணப்படுகிறார். சேகர் கம்முலா இயக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு உட்பட மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. இதனிடையே தனுஷின் 50வது படத்தை அவரே இயக்கியுள்ளார். பவர் பாண்டிக்குப் பின்னர் தனுஷ் இயக்கியுள்ள இரண்டாவது படம் டி 50 என்பது குறிப்பிடத்தக்கது.

 Dhanush D 50: Dhanushs D50 is expected to be released in July

வடசென்னையை பின்னணியாக வைத்து கேங்ஸ்டர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் தனுஷுடன் எஸ்ஜே சூர்யா, நித்யா மேனன், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி 50 ஸ்டார் காஸ்டிங் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக ஒரு தகவலும் வெளியாகவில்லை. இந்தப் படம் பற்றிய தகவல்களை ரொம்பவே சர்ப்ரைஸ்ஸாக வைத்துள்ளார் தனுஷ்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள டி 50 படம் ஏப்ரலில் வெளியாகும் என சொல்லப்பட்டது. மேலும் இப்படத்திற்கு ராயன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன. ஏப்ரல், மே மாதங்களில் 2024ம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் D 50 படத்தின் ரிலீஸை தள்ளி வைக்க தனுஷ் முடிவு செய்துள்ளாராம். அதன்படி இந்தப் படத்தை ஜூலை மாதம் வெளியிட தனுஷ் திட்டமிட்டுள்ளாராம்.

தனுஷின் 25வது படமாக வெளியான வேலையில்லா பட்டதாரி சூப்பர் ஹிட் அடித்தது. தனுஷ், அமலா பால், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் 2014 ஜூலை மாதம் வெளியானது. 25வது படம் ஜூலை மாதம் வெளியாகி ஹிட்டானதால், அதே ஜூலையில் தனது 50வது படத்தை வெளியிட தனுஷ் முடிவு செய்துள்ளாராம். தனுஷின் இந்த சென்டிமென்ட் சம்பவம் கோலிவுட்டையே பரபரக்க வைத்துள்ளது.

தனுஷின் டி 50 மட்டும் இல்லாமல், பா ரஞ்சித் - விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படமும் ஜூலையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ஏப்ரல், மே மாதங்களில் வெளியாகவிருந்த பெரிய பட்ஜெட் படங்கள் அனைத்துமே தற்போது புதிய ரிலீஸ் தேதியை தேடிக் கொண்டிருக்கிருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ் மட்டும் இல்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் இதே நிலை தான் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X