Dhanush: D 50-ல் தனுஷின் கேரக்டர் பெயர்... டைட்டிலில் இருக்கும் சீக்ரெட்... பரபரக்கும் அப்டேட் இதோ
சென்னை: தனுஷின் 50வது படமாக உருவாகும் D50 ஷூட்டிங் ஏற்கனவே முடிந்துவிட்டது. தனுஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் டைட்டில் ராயன் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தனுஷின் கேரக்டர் பெயர் மட்டுமின்றி D50 ரிலீஸ் தேதி பற்றியும் தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷின் D 50 அப்டேட்
தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது. அருண் மாதேஸ்வரன் இயக்கிய இந்தப் படம் எதிர்பார்த்தளவில் வெற்றிப் பெறவில்லை. இதனையடுத்து தற்போது ஓடிடியில் வெளியாகவும் ரெடியாகிவிட்டது. அதன்படி கேப்டன் மில்லர் திரைப்படம் வரும் 9ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது. இந்நிலையில், தனுஷின் 50வது படத்தில் இருந்து அப்டேட்கள் வெளியாகியுள்ளன.

தனுஷின் 50வது படத்தை அவரே இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். தனுஷுடன் நித்யா மேனன், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் இதுகுறித்து D50 படக்குழு எந்த அப்டேட்டையும் வெளியிடவில்லை. இந்நிலையில் D50 படப்பிடிப்பை முடித்துவிட்ட தனுஷ், தனது 51வது படத்தில் பிஸியாகிவிட்டார்.
இன்னொரு பக்கம் D50 போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளையும் தனுஷ் பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது. அசுர வேகத்தில் நடைபெறும் D50 போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விரைவில் முடிவுக்கு வருகிறதாம். இதனையடுத்து இந்தப் படத்தை சம்மரில் வெளியிட தனுஷ் முடிவு செய்துள்ளாராம். இந்தப் படத்தின் டைட்டில் ராயன் என சொல்லப்படுகிறது.
இது தான் இந்தப் படத்தில் தனுஷின் கேரக்டர் பெயர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி காத்தவராயன் என்ற கேரக்டரில் தனுஷ் நடித்துள்ளாராம். வடசென்னை பின்னணியில் தரமான கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள இதில், தனுஷ் - எஸ்ஜே சூர்யா ஆகியோரின் காட்சிகள் செம்ம மிரட்டலாக உருவாகியுள்ளதாம். இதுதான் தனுஷ் - எஸ்ஜே சூர்யா காம்போவில் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தனுஷ் தற்போது நடித்து வரும் தனது 51வது படத்திலும் மும்பை கேங்ஸ்டராக நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து கேங்ஸ்டர் ஜானர் படங்களில் நடித்து வரும் தனுஷ், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற ரொமாண்டிக் படத்தை இயக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











