எதிர்நீச்சல் இயக்குநருடன் இணைகிறேனா? - தனுஷ் விளக்கம்
எதிர்நீச்சல் படத்தின் இயக்குநருக்கு கால்ஷீட் தந்திருப்பதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளார் தனுஷ்.
சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது படம் 'வேலையில்லா பட்டதாரி'.

3 படங்கள்
இப்படத்தையடுத்து, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘அனேகன்', இந்தியில் அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாசன் ஆகியோருடன் இணைந்து ‘ஷமிதாப்' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

மறுப்பு
இந்நிலையில், ‘எதிர்நீச்சல்' படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிப்பதாக செய்திகள் வெளியாயின. இந்த செய்தியை தனுஷ் மறுத்துள்ளார்.

ட்விட்டரில்
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது, "நான் இப்போதைக்கு யார் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. இதுகுறித்து நான் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. அவ்வாறு நான் எந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டால் முதலில் உங்களுடன் பகிர்ந்துகொள்வேன்," என்று கூறியுள்ளார்.

டாணா
துரை செந்தில்குமார் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ‘காவல்காரன்' (டாணா) என்ற படத்தை இயக்கி வருகிறார். இவருடைய முதல் படமான ‘எதிர்நீச்சல்' படத்தை தனுஷ் தயாரித்திருந்தார். அதனாலேயே இப்படி ஒரு செய்தி வெளியாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications











