Dhanush: மகன்களுடன் பொங்கல் கொண்டாடிய தனுஷ்... அடடா! கூடவே 2 ஸ்பெஷல் கெஸ்ட்டும் இருக்காங்களே!
சென்னை: தனுஷின் கேப்டன் மில்லர் இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக வெளியானது. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடியுள்ளார். தனுஷின் இந்த பொங்கல் கொண்டாட்டத்தில் மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன் மேலும் இரண்டு பேர் இணைந்துள்ளது ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளது.
தனுஷின் பொங்கல் கொண்டாட்டம்
கோலிவுட்டின் வெரைட்டியான மாஸ் ஹீரோவாக வலம் வரும் தனுஷ், தமிழ், இந்தி உட்பட ஹாலிவுட்டிலும் நடித்து வருகிறார். இந்தாண்டு கேப்டன் மில்லர் மூலம் என்ட்ரி கொடுத்துள்ள தனுஷ், அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகியுள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள கேப்டன் மில்லர் பொங்கல் ஸ்பெஷலாக வெளியானது. இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் சிறப்பான ஓபனிங் கிடைத்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸிலும் இதுவரை 20 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளது கேப்டன் மில்லர். படம் வெளியான ஒரே நாளில் வெற்றியை கொண்டாடியது கேப்டன் மில்லர் படக்குழு. அதேபோல் தனுஷின் வெறித்தனமான நடிப்புக்கும் ரசிகர்களிடம் மிகப் பெரிய பாராட்டு கிடைத்துள்ளது. இதனையடுத்து இந்தாண்டு பொங்கலை உற்சாகமாக கொண்டாடியுள்ளார் தனுஷ்.
அதன்படி, தனுஷுடன் அவரது மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோரும் வெள்ளை நிற வேஷ்டி, சட்டையில் கெத்தாக பொங்கல் கொண்டாடியுள்ளனர். இவர்களுடன் தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா, அம்மா ஆகியோரும் பொங்கல் கொண்டாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழாவுக்கும் தனது மகன்களுடன் தனுஷ் சென்றிருந்தார். இப்போது கேப்டன் மில்லர் வெற்றியாக இந்த பொங்கல் பண்டிகையையும் மகன்களுடன் கொண்டாடியுள்ளார் தனுஷ்.
கடந்தாண்டு தீபாவளியை சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கொண்டாடியிருந்தனர் தனுஷின் மகன்கள். அதனைத் தொடர்ந்து இப்போது பொங்கலை அப்பா தனுஷுடன் கொண்டாடியது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகன்களுடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள தனுஷ், ரசிகர்களுக்கும் பொங்கல் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











