Dhanush: பூஜையுடன் தொடங்கிய D51 ஷூட்டிங்... தனுஷின் கெட்டப் எப்படி இருக்குன்னு பாருங்க..?
சென்னை: தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியானது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் மில்லருக்கு முதல் நாள் மட்டுமே நல்ல ஓபனிங் கிடைத்தது. இந்நிலையில், கேப்டன் மில்லர் வைப்-இல் இருந்து வெளியான தனுஷ், தனது 51வது படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். D51 என்ற டைட்டிலில் உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது.
பூஜையுடன் தொடங்கிய D51 ஷூட்டிங்
கோலிவுட்டின் பிஸியான ஹீரோக்களில் தனுஷ் தான் முதலிடத்தில் இருப்பார். ஒரேநேரத்தில் எத்தனை படங்களில் நடிப்பார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். கேப்டன் மில்லர் படத்தில் நடித்த போதே, தனது 50வது படத்தையும் முடித்துவிட்டார். அவரே இயக்கி ஹீரோவாக நடித்துள்ள D50, விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே பொங்கலுக்கு ரிலீஸான கேப்டன் மில்லர் எதிர்பார்த்தளவில் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில், தனுஷ் தனது 51வது படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். D 51 படத்திற்காக டோலிவுட் இயக்குநர் சேகர் கம்முலாவுடன் இணைந்துள்ளார் தனுஷ். டாலர் ட்ரீம்ஸ் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சேகர் கம்முலா, ஹேப்பி டேய்ஸ், லீடர், ஃபிடா, லவ் ஸ்டோரி போன்ற படங்களை இயக்கியுள்ளார். இதன் தொடர்ச்சியாக தற்போது தனுஷின் 51வது படத்தை இயக்கவுள்ளார்.
தனுஷின் D51 படத்தில் நாகர்ஜுனாவும் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளார். அதேபோல், தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிப்பதும் உறுதியாகியுள்ளது. இந்தப் படத்தின் இசையமைப்பாளராக தேவிஸ்ரீ பிரசாத் கமிட்டாகியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பான் இந்தியா படமாக உருவாகும் D 51 ஷூட்டிங், தெலங்கானாவின் யாதகிரிகுட்டா பகுதியில் பூஜையுடன் தொடங்கியது.
இதில் தனுஷ், இயக்குநர் சேகர் கம்முலா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இதில் தனுஷின் கெட்டப் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளது. கேப்டன் மில்லரில் மூன்று தோற்றங்களில் நடித்திருந்த தனுஷ், D51 படத்தில் நீளமான தாடியுடன் நடிக்கவுள்ளாராம். D51 பூஜை நிகழ்ச்சியிலும் தாடியுடன் கொஞ்சம் வித்தியாசமான கெட்டப்பில் வந்து அசத்தியுள்ளார்.
இந்நிலையில், D51 முதல் ஷெட்யூலில் தனுஷ் - நாகர்ஜுனா சம்பந்தப்பட்ட காட்சிகள் 4 நாட்கள் வரை படமாக்கப்பட உள்ளன. அதனைத் தொடர்ந்து வரும் 24ம் தேதி மும்பையில் தனுஷ் - ராஷ்மிகா மந்தனா நடிக்கும் காட்சிகளை படமாக்க சேகர் கம்முலா பிளான் செய்துள்ளாராம். இன்னொரு பக்கம் D 50 படத்தின் ரிலீஸ் வேலைகளையும் பிஸியாக கவனித்து வருகிறார் தனுஷ்.


Click it and Unblock the Notifications











