Dhanush: D 51 முடியும் முன்பே D 52 ஷூட்டிங்... தனுஷ் - H வினோத் கூட்டணியின் திடீர் முடிவு!

சென்னை: தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான கேப்டன் மில்லர் படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் அவரே இயக்கி நடித்துள்ள 50வது படம் பற்றிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள் அப்டேட்டுக்காக காத்திருக்கின்றனர். இதனிடையே தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் தனது 51வது படத்தில் நடித்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக ஹெச் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ள D 52 படத்தின் ஷூட்டிங் குறித்து தகவல் கிடைத்துள்ளது.

தனுஷ் - H வினோத் கூட்டணியின் திடீர் முடிவு

தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷின் கைவசம் ஏராளமான படங்கள் உள்ளன. பொங்கலுக்கு வெளியான தனுஷின் கேப்டன் மில்லர் எதிர்பார்த்தளவு வெற்றிப் பெறவில்லை. இதனையடுத்து தனது 51வது படத்தின் படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார் தனுஷ். இதனிடையே தனது 50வது படத்தை அவரே இயக்கி நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 Dhanush: Dhanush - H Vinoth D52 movie Shoot Plan To April 11th

அதன்படி தனுஷின் D 50 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் தனுஷ் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் H வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டாகியுள்ளார் தனுஷ். இந்தப் படத்தின் ஷூட்டிங் முதலில் அடுத்தாண்டு தான் தொடங்கும் என சொல்லப்பட்டது.

அதற்கு முன்னதாக கமலின் 233வது படத்தை இயக்கவிருந்தார் H வினோத். ஆனால் இந்தப் படம் இப்போதைக்கு உருவாக வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. இதனால் விஜய்க்கும் ஒரு கதை சொல்லி காத்திருந்த H வினோத் இப்போது தனுஷ் பக்கம் சென்றுவிட்டாராம். அதன்படி தனுஷ் - H வினோத் கூட்டணியில் D 52 திரைப்படம் உருவாகவுள்ளதாம். இதுகுறித்து இன்னும் அபிஸியல் அப்டேட் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் தனுஷ் - வினோத் இணையும் படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சேகர் கம்முலா இயக்கும் படத்தின் ஷூட்டிங் ஜூன் அல்லது ஜூலை வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை காத்திருக்காமல் உடனடியாக தனது படத்தின் ஷூட்டிங்கை தொடங்கிவிடலாம் என தனுஷே சிக்னல் கொடுத்துவிட்டாராம். இதனால் ஏப்ரல் 11ம் தேதி முதல் D 52 ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X