1000 கோடி, 2000 கோடிலாம் மறந்துடுங்க.. நான் கஷ்டப்பட்டேன்னு சொல்றதுக்கே கூச்சமா இருக்கு - தனுஷ்!

சென்னை: இயக்குநர் ராஜமெளலி ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற தனுஷின் குபேரா படத்தின் டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். தனுஷ் பற்றியும் குபேரா படத்தில் நடித்த நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் மற்ற பிரபலங்கள் குறித்தும் பலரும் ஏகப்பட்ட விஷயங்களை பேசி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினர்.

கடைசியாக மேடையேறிய நடிகர் தனுஷ், இந்த முறை தெலுங்கில் ரசிகர்களுடன் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆங்கிலம் மற்றும் தமிழ் கலந்தே பேசினார். முன்னதாக வாத்தி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது, அடுத்த முறை தெலுங்கில் பேசுவதாக அறிவித்திருந்தார்.

Dhanush emotional talks at Kuberaa trailer release event grabs fans hearts
Photo Credit:

ராஷ்மிகா மந்தனாவை பலரும் 1000 கோடி ஹீரோயின், 2000 கோடி ஹீரோயின்னு சொல்லி பாராட்டுறாங்க, ஆனால், நீங்க அதை எல்லாம் மறந்துடுங்க என தனுஷ் பேசும் போது கூறியதும், ராஷ்மிகா மந்தனா ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டார்.

இந்த வாரம் குபேரா வருகிறான்: பிச்சைக்காரனாக இருக்கும் தேவாவை நாகார்ஜுனா கதாபாத்திரம் எப்படி குபேராக சீவி சிங்காரித்து கோட் சூட் மாட்டிவிட்டு உட்கார வைக்கிறது என்றும் எதற்காக அவர் அப்படி செய்கிறார்? என்பதும் தான் குபேரா படத்தின் கதை. சேகர் கம்முலா தனது உடல்நிலை சரியில்லாத நிலையிலும், இப்படியொரு பெரிய படத்தை முடித்துக் கொடுத்துள்ள நிலையில், முதலில் அப்பாவுக்கு தந்தையர் தினத்தை முன்னிட்டு நன்றி சொல்லிவிட்டு, அதன் பின்னர், சேகர் கம்முலாவின் உடல்நிலை குறித்தும் மேடையில் விசாரித்தார் தனுஷ். இந்த வாரம் ஜூன் 20ம் தேதி குபேரா படம் உலகம் முழுவதும் வெளியாகிறது.

1000 கோடி 2000 கோடிலாம் மறந்துடுங்க: சினிமாவில் தற்போது பலரும் பாக்ஸ் ஆபீஸ் நம்பர்ஸ்கள் பின்னாடி ஓடிக் கொண்டிருக்கும் போது, சேகர் கம்முலா சார் பட்டாம்பூச்சிகளின் பின்னாடி ஓடிக் கொண்டிருந்தார். தனக்கு தேவையான விஷயம் வரும் வரை ஸ்டபர்னாக இருந்து இந்த படத்தை முடித்தார். நல்ல விஷயத்துக்காக அது இருக்கவே வேண்டும் என்றார் தனுஷ். மேலும், ராஷ்மிகா மந்தனாவுக்கு சமீப காலமாக 1000 கோடி ஹீரோயின், 2000 கோடி ஹீரோயின் என்கிற டேக் ஒட்டப்பட்டுள்ளது. அதையெல்லாம் மறந்துடுங்க, ஒவ்வொரு படத்துக்கும் குபேரா படத்தில் போட்டதை போல ஹார்ட்வொர்க் போட்டு நடிங்க, அதுதான் நமக்கு ரொம்பவே முக்கியம், இந்த வசூல் அதிர்ஷ்டம் எல்லாம் தானாகவே உங்களை தேடி வரும் என்றதும், நன்றியுணர்வுடன் உணர்ச்சிவசப்பட்டு ராஷ்மிகா கொடுத்த ரியாக்‌ஷன்கள் ரசிகர்களை கவர்ந்தன.

Dhanush emotional talks at Kuberaa trailer release event grabs fans hearts
Photo Credit:

கூச்சமா இருக்கு: தோட்டா தரணி சார் பெயர் சிறு வயதில் பத்திரிகைகளில் வரும்போதெல்லாம் அதை பார்த்து விட்டு, ஏதோ அவர் தோட்டா செய்பவர் என்றும் துப்பாக்கி செய்பவர் என்றும் நினைத்துக் கொண்டிருந்தேன். அப்படியொரு லெஜண்ட் உடன் பணியாற்றும் அனுபவம் கிடைத்ததை நினைத்து கர்வம் அடைகிறேன் என்றார். இந்த படத்தில், நான், ராஷ்மிகா, நாகார்ஜுனா சார் எல்லாம் பட்ட கஷ்டத்தை விட இயக்குநர் சேகர் கம்முலா, தோட்டா தரணி சார், ஸ்ரீதேவி பிரசாத், உதவி இயக்குநர்கள் எல்லாம் பட்டக் கஷ்டத்தை நினைத்தால், நானெல்லாம் கஷ்டப்பட்டேன் என சொல்வதற்கே கூச்சமா இருக்கு என்றார் தனுஷ். குபேரா படத்தில் நடித்த பல நடிகர்களை நானே இங்கே தான் டிரைலரில் பார்த்து ஆச்சர்யமடைகிறேன். 3 வருடங்கள் இந்த படம் எடுக்கப்பட்ட நிலையில், படக்குழுவின் ஒட்டுமொத்த உழைப்பும் ஜூன் 20ம் தேதி திரையில் தெரியும் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X