சென்டர் ஃப்ரஷ் பிராண்ட் அம்பாசிடரான தனுஷ்
சென்னை: தனுஷ் சென்டர் ஃப்ரஷ் சூயிங் கம்மின் பிராண்ட் அம்பாசிடராகியுள்ளார்.
தனுஷின் ராஞ்ஹனா படம் அவரை வட இந்தியாவில் பிரபலமாக்கிவிட்டது. ஒரு படத்தில் நடித்தாலும் நடித்தால் வட இந்தியாவின் வான்டட் ரொமான்டிக் ஹீரோவாகிவிட்டார். இந்த படம் மூலம் தனுஷ், சோனம் கபூர் ஜோடி சூப்பர் ரீல் ஜோடியாகிவிட்டது.
ராஞ்ஹனா முடித்த கையோடு தனுஷ், சோனம் கபூரை லக்ஸ் நிறுவனம் தங்களின் பிராண்ட் அம்பாசிடராக ஆக்கியது.

லக்ஸ் ஜோடி
இனி லக்ஸ் விளம்பரத்தில் தனுஷும், சோனம் கபூரும் ஜோடியாக வருவதை பார்க்கலாம்.

சென்டர் ஃப்ரஷ்
சென்டர் ஃப்ரஷ் சூயிங் கம் நிறுவனம் தனுஷை தனது பிராண்ட் அம்பாசிடராக ஆக்கியுள்ளது.

வெங்கட் பிரபு
சென்டர் ஃப்ரஷ் விளம்பர படத்தை வெங்கட் பிரபு இயக்க தனுஷ் அதில் நடித்துள்ளார். இந்த விளம்பர படத்தில் வெங்கட் பிரபுவுடன் பணிபுரிந்தது இனிய அனுபவமாக இருந்ததாக தனுஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications