ஆபாச பட நடிகர்னு தனுஷுக்கு முத்திரை விழுந்தது.. ரொம்ப ஃபீல் செஞ்சாரு.. சுசித்ரா ஓபன் டாக்

சென்னை: இந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர் என்று பெயர் எடுத்திருப்பவர் தனுஷ். இரண்டு முறை தேசிய விருதுகளையும் வாங்கியிருக்கிறார். அடுத்ததாக அவரது நடிப்பில் கர திரைப்படம் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. நேற்று படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் சென்னையில் கோலாகலமாக நடந்தது. இந்நிலையில் பிரபல பின்னணி பாடகி சுசித்ரா தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனுஷ் குறித்து பேசியிருக்கிறார்.

தந்தையின் ஆசைக்காக சினிமாவுக்கு வந்த தனுஷ்; ஒருகட்டத்தில் இந்தத் துறையிலேயே நீடிப்பது என்று முடிவெடுத்தார். அதன் காரணமாக நடனம், சண்டை என அத்தனையையும் பயின்று தன்னை ஒரு திறமை வாய்ந்தவராக உயர்த்திக்கொண்டார். அதன் காரணமாகத்தான் இள வயதிலேயே பாலுமகேந்திராவின் இயக்கத்தில் எல்லாம் அவரால் நடிக்க முடிந்தது. பாலுமகேந்திராவும் தனுஷ் ஒரு சர்வதேச நடிகர் என்று அப்போதே புகழ்ந்திருந்ததும் நினைவுகூரத்தக்கது. மேலும் அவர் மூலம்தான் தனுஷுக்கு வெற்றியும் நெருங்கிய பழக்கமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Dhanush Faced Humiliation During Kadhal Konden Days Singer Suchitra Recalls Incident
Photo Credit:

சூப்பர் நடிகர்: பாலுமகேந்திரா கணித்தபடியே இப்போது தனுஷ் சர்வதேச நடிகராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். தேசிய விருதையும் இரண்டு முறை வாங்கிவிட்டார். எந்த கேரக்டர் கொடுத்தாலும் அசால்ட்டாக செய்யும் அவரை பார்த்து பாரதிராஜாவே ஒருமுறை மிரண்டு போய்விட்டார். அசுரன் படத்தில் தந்தை ரோலை தனுஷ் செய்திருந்த விதத்தை பார்த்து இயக்குநர் இமயம் புகழ்ந்திருந்தார். தனுஷுக்கு ஒரு தியேட்டரிக்கல் ஹிட் கிடைத்து நீண்ட வருடங்கள் ஆகிவிட்டன. எனவே விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் கர திரைப்படம் தனக்கு அப்படி ஒரு ஹிட்டை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அவர். ஏப்ரல் 30ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது.

சர்ச்சைகளில் தனுஷ்: இதற்கிடையே தனுஷை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் வந்துவிட்டன. ஸ்ருதிஹாசனுடன் கிசுகிசு, அமலா பாலுடன் கிசுகிசு என எக்கச்சக்க பிரச்னைகள் முளைத்தன. பற்றாக்குறைக்கு தனுஷும் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் விவாகரத்து செய்து வேறு பிரிந்துவிட்டார்கள்.அந்த விஷயத்திலும் தனுஷின் கேரக்டரை சிலர் அடித்தார்கள். முக்கியமாக பிரபல பின்னணி பாடகியான சுசித்ராவோ; சுச்சி லீக்ஸை வெளியிட்டதே தனுஷ்தான் என ஒரே குண்டாக தூக்கிப்போட்டார். அதற்கு தனுஷ் மறைமுகமாக சில பதிலடிகளை கொடுத்து சைலெண்ட் ஆகிவிட்டார்.

சுசித்ரா பேட்டி: இந்நிலையில் சுசித்ரா சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "சூர்யா மீது எனக்கு க்ரஷ் இருந்தது. தனுஷ் எனக்கு தம்பி மாதிரி. அவர் நடித்த காதல் கொண்டேன் திரைப்படம் ரிலீஸாகி சில நாட்களிலேயே ஜெயலலிதாவுக்கு ஒரு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அந்த விழாவில் தமிழ் தாய் வாழ்த்து பாட சென்றிருந்தேன். அப்போது தனுஷ் நேரு ஸ்டேடியத்தில் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தார். அவரை பார்த்து என்னுடன் இருந்தவர்கள்; ஹே அந்த ஆபாச படத்தில் நடித்த ஹீரோ வந்திருக்கார் என்று கூறினார்கள்.

அருகில் அமர்ந்தேன்: அவர்களுக்கு காதல் கொண்டேன் ஆபாச படமாம். தனுஷ் ரொம்பவே லோவாக ஃபீல் செய்தார். நான் அவர் அருகில் சென்று அமர்ந்து நல்லபடியாக பேசினேன். அப்போதிருந்துதான் பழக்கம். அதற்கு பிறகு திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் ஒரு பாடல் பாட தனுஷ் வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தார். நான் சென்றபோது தனுஷ் பிரெஷர் போட்டதால்தான் உங்களை பாட அழைத்தேன் என இமான் கூறினார். நானோ உங்கள் வாய்ப்பே வேண்டாம் என்று சொல்லி வந்துவிட்டேன். இதை தனுஷிடமும் சொன்னேன். அவரும் கடுபபகி இனிமேல் இமானோடு நான் வேலையே செய்யமாட்டேன் என சொல்லிவிட்டார். இப்படி நெருக்கமாகத்தான் இருந்தார். ஆனால் பூர்ணிமா என்பவர் என்னை பற்றி அவரிடம் இல்லாதது பொல்லாதடை எல்லாம் போட்டு கொடுத்துட்டார். அப்போதிருந்து எங்களுக்குள் விரிசல் வந்துவிட்டது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X