twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வசனத்தை நீக்கிய தனுஷ்... தம்மடிக்கும் பேனரை மட்டும் நீக்கவே இல்லை!

    By Shankar
    |

    வேலையில்லா பட்டதாரி படத்தில் இடம்பெற்ற ராமகிருஷ்ண மிஷன் பள்ளி குறித்த வசனத்தை நீக்கிய தனுஷ், தம்மடிக்கும் பேனர்களை மட்டும் நீக்கவே இல்லை.

    வேலையில்லா பட்டதாரி திரைப்படம் பெரிய வெற்றிப்படமாகியுள்ளது. நல்ல வசூல், இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது படம். ஆனால் படம் குறித்த சர்ச்சைகள் தொடர்கின்றன.

    சர்ச்சை வசனம்

    சர்ச்சை வசனம்

    ‘என்னை ராமகிருஷ்ணா ஸ்கூல்லதான படிக்க வெச்சீங்க' என இந்தப் படத்தில் தனுஷ், ராமகிருஷ்ணா பள்ளியை தரம் குறைத்து பேசியதாக அந்த பள்ளிகளின் நிர்வாகிகள் தனுஷ் மீது புகார் கொடுத்தனர்.

    நீக்கம்

    நீக்கம்

    உடன தனுஷ், இயக்குனர் வேல்ராஜுடன் கலந்தாலோசித்து அந்த வசனத்தை படத்திலிருந்து நீக்கிவிட்டார். ஆனாலும் இதற்கு முன்பே ஏற்பட்ட இன்னொரு பிரச்சனை தனுஷின் முன்பு தற்போது விஸ்வரூபமாக வந்து நிற்கிறது.

    தம் பேனர்...

    தம் பேனர்...

    வேலையில்லா பட்டதாரி படத்தின் புரமோஷனுக்காக சென்னை நகரத்தின் முக்கிய இடங்களில் அப்படத்தின் பிரம்மாண்டமாக பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதிலும் தனுஷ் சிகரெட் பிடிக்கிறார்... அவர் வாயிலிருந்து அதோ கரி வண்டியிலிருந்து வருவது போல குபுகுபுவென புகை...

    எதிர்ப்பு

    எதிர்ப்பு

    இந்த பேனர்களை எதிர்த்து புகையிலையை எதிர்க்கும் அமைப்பினர் புகார் கொடுத்ததன் எதிரொலியாக, தனுஷ் கிட்டத்தட்ட கைதாகும் நிலைக்குச் சென்றதாகக் கூறப்பட்டது.

    உறுதியை மீறினார்

    உறுதியை மீறினார்

    ‘கூடிய விரைவில் அந்த பேனர்கள் அகற்றப்படும்' என்று கூறி இந்த பிரச்சனையை முடிக்க நினைத்தார் தனுஷ். ஆனாலும் இன்றுவரை தனுஷ் சிகரெட் பிடித்துக்கொண்டிருக்கும் பேனர் ஏ.வி.எம் ஸ்டூடியோவின் வாசலில் பெரிதாக நின்றுகொண்டுதானிருக்கிறது. ஒரு நடவடிக்கையும் காணோம்!

    English summary
    Actor Dhanush isn't removing his smoking banners for VIP movie as he assured earlier to the anti tobacco organisers.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X