குடும்பத்துடன் விசேஷத்தில் கலந்துகொண்ட தனுஷ்.. அட மகன்களும் இருக்காங்களே!

சென்னை : நடிகர் cஇன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இதையொட்டி வாத்தி மற்றும் நானே வருவேன் படங்களின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளன.

அவரது திருச்சிற்றம்பலம் ஆகஸ்ட் 18ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் துள்ளுவதோ இளமை படம்மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர். இவரது ஒல்லியான தோற்றம் பல விமர்சனங்களை ஏற்படுத்தியது. ஆனாலும் அந்த விமர்சனங்களை உடைத்துக் கொண்டு தன்னை சிறப்பான ஹீரோவாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். இந்திய அளவில் மட்டுமில்லாமல் ஹாலிவுட்டிலும் இவர் நடித்து வருகிறார்.

 ஹாலிவுட்டில் தனுஷ்

ஹாலிவுட்டில் தனுஷ்

சமீபத்தில் இவரது நடிப்பில் ஓடிடியில் வெளியான தி க்ரே மேன் ஹாலிவுட் படம், இவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது. இந்தப் படத்தில் அவெஞ்சர்ஸ் இயக்குநர்கள் ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் நடித்துள்ள தனுஷ், மீண்டும் அவர்களுடன் இணைந்து படத்தில் நடிக்கவுள்ளார்.

சிறப்பான பிரமோஷன்

சிறப்பான பிரமோஷன்

இந்தப் படத்தின் பிரமோஷன்கள் அமெரிக்கா மற்றும் மும்பையில் நடைபெற்ற நிலையில், தன்னுடைய மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் அமெரிக்காவில் நடைபெற்ற ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டார். தொடர்ந்து மகன்கள் மட்டும் சென்னை திரும்பிய நிலையில், அவர் மும்பையில் நடைபெற்ற ப்ரமோஷன்களில் பங்கேற்றார்.

 குடும்பத்துடன் குரூப் புகைப்படம்

குடும்பத்துடன் குரூப் புகைப்படம்

ஐஸ்வர்யா ரஜினியுடனான விவாகரத்து அறிவிப்புக்கு பின்னர், தன்னுடைய மகன்களுடன் இணைந்து பல நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற தன்னுடைய குடும்ப விழாவில் தன்னுடைய குடும்பத்தினருடன் பங்கேற்ற தனுஷ், அவர்களுடன் இணைந்து குரூப் புகைப்படத்தை எடுத்துக் கொண்டுள்ளார்.

மகன்களுடன் தனுஷ்

மகன்களுடன் தனுஷ்

இதில் தற்போதைய நானே வருவேன் படத்தின் லுக்கில் ஸ்டைலாக உள்ளார் தனுஷ். மேலும் இந்த குரூப் புகைப்படத்தில் அவரது மகன்களும் உள்ளனர். அவரது அம்மா, அப்பா, அவரது அண்ணன் இயக்குநர் செல்வராகவன் அவரது மனைவி உள்ளிட்ட அனைவரும் இந்தப் புகைப்படத்தில் காணப்படுகின்றனர்.

 ஆகஸ்ட்டில் வெளியாகும் திருச்சிற்றம்பலம்

ஆகஸ்ட்டில் வெளியாகும் திருச்சிற்றம்பலம்

தனுஷின் தி க்ரே மேன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அவரது திருச்சிற்றம்பலம் படம் வரும் ஆகஸ்ட் 18ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. தொடர்ந்து அவரது ஜகமே தந்திரம், அட்ராங்கி ரே மற்றும் மாறன் படங்கள் ஓடிடியில் வெளியான நிலையில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X