இந்தா கிளம்பிட்டாங்கள்ல.. அஜித்.. விஜய் ரசிகர்களை தொடர்ந்து கோதாவில் குதித்த தனுஷ் ரசிகர்கள்!
சென்னை: அஜித், விஜய் ரசிகர்களை தொடர்ந்து தனுஷின் ரசிகர்களும் அவரது பிறந்த நாளை டிவிட்டரில் ட்ரென்ட்டாக்கி வருகின்றனர்.
அஜித் மற்றும் விஜய் ரசிகர்களால் டிவிட்டர் மீடியாவே காலை முதல் திணறி வருகிறது. மே ஒன்றாம் தேதி அஜித் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு அஜித் ரசிகர்கள் #மே1தலதிருவிழா என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்தனர். இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரென்ட்டானது.
இதனை தொடர்ந்து அஜித் ரசிகர்களுக்கு போட்டியாக விஜய் ரசிர்கள் #ஜூன்22தமிழன்திருவிழா என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் சென்னை ட்ரெண்டிங்கில் டாப்பிலும் இந்திய அளவிலும் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதில் ரசிகர்கள் தங்களின் நடிகர்கள் குறித்து புகழ் பத்திரம் வாசித்து வருகின்றனர்.

அஜித் மற்றும் விஜய் ரசிகர்களின் போட்டியால் டிவிட்டர் இணையதளம் காலை முதல் திக்குமுக்காடி வருகிறது. இந்நிலையில் அஜித் விஜய் ரசிகர்களுக்கு போட்டியாக தனுஷ் ரசிகர்களும் கோதாவில் குவித்துள்ளனர். ஜூலை 28ஆம் தேதி தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு #ஜூலை28தங்கமகன்திருவிழா என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

அஜித் விஜய்க்கு பிறகு நடனம் மற்றும் நடிப்பால் குழந்தைகளை கவர்ந்த ஒரு நடிகர் என்றால் அது நடிகர் தனுஷ்தான் என்று பதிவிட்டுள்ளார் இந்த ரசிகர். ஜூலை 28 ஆம் தேதி சாதாரண நாள் இல்லை.. தனுஷ் ரசிகர்களுக்கு அது ஒரு பெரும் திருவிழா என பதிவிட்டுள்ளார் தனுஷின் இந்த ரசிகர்.


Click it and Unblock the Notifications











