வல்லவன் பட பெட்ரூம் சீன் காட்சிகளை போட்டு எல்லை மீறும் தனுஷ் ரசிகர்கள்.. நயன்தாரா ஃபேன்ஸ் கொதிப்பு!

சென்னை: நடிகை நயன்தாரா தனுஷ் ஒரு மோசமான சைக்கோ என்றும் அப்பா கஸ்தூரி ராஜா மற்றும் அண்ணன் செல்வராகவன் துணையால் சினிமாவுக்கு வந்தவர் என்று ஆரம்பத்திலேயே ஏகப்பட்ட அவதூறுகளை வெறும் 3 செகண்ட் படக்காட்சியை பணத்திற்காக கொடுக்கிறேன் என சொன்னதற்காக டோட்டல் டேமேஜ் செய்ய முயற்சித்தார்.

ஆனால், அதற்கு மாறாக தனுஷ் ரசிகர்களிடம் சோஷியல் மீடியாவில் தற்போது சிக்கியிருப்பது நயன்தாரா தான். பிரதீப் ஆண்டனிக்கு எதிராக மாயா அண்ட் கேங் உமன் கார்டு பயன்படுத்தி அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பிய நிலையில், ஒட்டுமொத்த ரசிகர்களும் பிரதீப் ஆண்டனிக்குத்தான் சப்போர்ட் செய்தனர்.

dhanush nayanthara simbu

தற்போது நடிகை நயன்தாரா உமன் கார்டு பயன்படுத்திய நிலையில், தனுஷுடன் இணைந்து நடித்த நடிகைகள் எல்லாம் லேடி சூப்பர் ஸ்டாருக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இந்த பிரச்சனை வேற ரூட்டுக்கு செல்லப் போகிறது என தெரிகிறது என சினிமா வட்டாரத்தில் பலரும் பேசி வரும் நிலையில், தனுஷ் ரசிகர்கள் நயன்தாராவை அசிங்கப்படுத்த சிம்புவுடன் அவர் நடித்த வல்லவன் படத்தின் காட்சிகளை ஷேர் செய்து எல்லை மீறி வருகின்றனர்.

அமைதி காக்கும் தனுஷ்: நயன்தாராவின் 3 பக்க அறிக்கையை பார்த்துவிட்டு நிச்சயம் நடிகர் தனுஷ் பொதுவெளியில் ரியாக்ட் செய்யமாட்டார் என்றும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு எதிராக வழக்கு தொடுப்பார் என்றும் கூறி வருகின்றனர். குபேரா க்ளிம்ப்ஸை மகேஷ் பாபு பாராட்டிய நிலையில், அதற்கு நன்றி தெரிவித்த தனுஷ் அதன் பின்னர் ட்விட்டர் பக்கமோ சோஷியல் மீடியா பக்கமோ வரவே இல்லை.

விளம்பரத்துக்காக நயன்தாரா ஆடும் கேம்: நெட்பிளிக்ஸில் தனது டாக்குமெண்டரி வீடியோ வரும் நவம்பர் 18ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதை பெரிதாக யாருமே கண்டுக் கொள்ளவில்லை என்பதால் அதை புரமோட் செய்யும் விதமாக நடிகை நயன்தாரா இந்த சர்ச்சையை கிளப்பி வியாபாரம் பார்த்து வருகிறார். பல தொழில்களை ஆரம்பித்து நடத்தி வரும் நயன்தாரா பக்கா பிசினஸ்மேனாக மாறிவிட்டார் என தனுஷுக்கு ஆதரவாக பல சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர்கள் மற்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எல்லை மீறும் தனுஷ் ரசிகர்கள்: யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாராவை தனுஷ் தலையில் அடித்து "கத்துன கொன்னுருவேன்" என வசனம் பேசும் காட்சிகளை ஷேர் செய்து நயன்தாராவை ட்ரோல் செய்து வருகின்றனர். மேலும், நயன்தாரா தனது இளமை காலத்தில் படு கிளாமராக பாடல்களில் நடித்த காட்சிகளையும் அஜித்தின் பில்லா படத்தில் பிகினியில் நடந்து வரும் காட்சிகளையும் வெளியிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.

வல்லவன் படக் காட்சிகள்: அனைத்துக்கும் மேலாக நயன்தாராவின் முன்னாள் காதலரான சிம்புவுடன் இணைந்து அவர் நடித்த வல்லவன் படத்தில் இடம்பெற்ற லிப் லாக் முத்தக் காட்சிகள் மற்றும் படுக்கையறை காட்சிகளை பரப்பி ஒட்டுமொத்த வன்மத்தையும் கக்கி வருகின்றனர். நடிகர் தனுஷின் ரசிகர் மன்றம் நயன்தாராவுக்கு எதிராக தீயாக வேலை பார்த்து வருவதால் லேடி சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொதித்துப் போய் தனுஷ் பற்றிய அவதூறு கருத்துக்களையும் ஷேர் செய்து சோஷியல் மீடியாவை ரணகள பூமியாக்கி வருகின்றனர்.

dhanush nayanthara simbu

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X