என்னாது, வருங்கால 'தமிழக முதல்வர்' தனுஷா?: போஸ்டரால் பரபரப்பு

By Siva

சென்னை: தனுஷின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் அடித்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். ஆனால் அவர் சொன்னபடி இன்னும் புதுக்கட்சி துவங்காததால் பலரும் பலவிதமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

Dhanush fans want to see him as TN CM

இதற்கிடையே அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பே அவர் வீட்டில் வாரிசு அரசியல் தலைதூக்கிவிட்டதாக பேச்சு கிளம்பியது.

இந்நிலையில் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பல வகைகளில் போஸ்டர்கள் அடித்து ஒட்டினர். அதில் ஒரு போஸ்டரில் தனுஷ் கொடி படத்தில் இருக்கும் கெட்டப் புகைப்படத்தை போட்டு வருங்கால தமிழக முதல்வரே என்று வாசகத்தை போட்டுள்ளனர்.

ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவிப்பதற்கு முன்பே அவரை வருங்கால தமிழக முதல்வர் என்று கூறி ரசிகர்கள் போஸ்டர் அடித்தனர். இந்நிலையில் தனுஷுக்கும் அதே போன்று போஸ்டர் அடித்துள்ளனர்.

ஆமாம், மாமனாரே இன்னும் வரவில்லையாம், அதற்குள் மருமகனுக்கு முதல்வர் பதவி பார்சலா என்று சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X