கோவையில் தனுஷுக்கு உற்சாக வரவேற்பு.. கர ப்ரீ ரிலீஸ் ஈவென்ட்.. நாளைக்கு மதுரையில் சூர்யா!

சென்னை: தமிழ் சினிமா பிரபலங்கள் இனிமேல் வெறும் சென்னையில் மட்டும் பட விழாக்களை நடத்தினால் பிரயோஜனம் இல்லை என்றும் பிற மாவட்ட மக்களை கவர் செய்வது ரொம்பவே முக்கியம் என புரிந்துக் கொண்டனர்.

அதிலும், குறிப்பாக வில்லேஜ் பேஸ்ட் சப்ஜெக்ட் படங்களுக்கு வெறும் சென்னையில் மட்டும் புரமோஷன் நடத்தினால் மற்ற மாவட்டங்களில் இருக்கும் ரசிகர்களுக்கு படம் வருவதே தெரியாது என்பதால் இப்படியொரு முடிவை ஹீரோக்கள் கையிலெடுத்து ஊர் ஊராக பயணம் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது நல்ல முன்னெடுப்பாக மாறியுள்ளது.

Dhanush gets massive response and welcome from Kovai peoples on behalf of Kara Pre release event

முன்னதாக சென்னையில் கர படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில், படத்தின் நாயகி மமிதா பைஜுவுக்கு என்ன விழா என்றே தெரியாமல் அவர் வெள்ளந்தியாக கேட்டுத் தெரிந்துக் கொண்ட வீடியோ வைரலானது.

கோவையில் தனுஷுக்கு உற்சாக வரவேற்பு: வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜு, கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள கர படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் கடந்த வாரம் நடைபெற்றது. இந்நிலையில், கோவையில் இன்று கர படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நிகழ்ச்சியை வேல்ஸ் நிறுவனம் நடத்தவுள்ள நிலையில், அதற்காக கோவை வந்த தனுஷுக்கு அங்குள்ள மக்கள் உற்சாக வரவேற்பளித்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.

கர காப்பாற்றுமா?: கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் 2 படங்கள் 100 கோடி வசூலை பெற்றாலும் அந்த 2 படங்களும் தெலுங்கு மற்றும் இந்தி படங்கள் தான். தமிழில் தனுஷ் இயக்கத்தில் வெளியான இட்லி கடை திரைப்படம் 65 கோடி அளவுக்குத்தான் வசூல் ஈட்டியதாக கூறப்படுகிறது. அறிமுக நடிகர்கள் படங்களே 100 கோடி வசூலை தாண்டி சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், தனுஷ் படத்துக்கு இந்த வசூல் எல்லாம் பத்தாது என்பதே நிதர்சனம். இந்நிலையில், கர திரைப்படம் தமிழ்நாட்டில் தனுஷுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்குமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மதுரையில் சூர்யா: கோவைக்கு தனுஷ் சென்றுள்ள நிலையில், நாளை மதுரையில் சூர்யாவின் கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. சூர்யாவுக்கும் மே 14ம் தேதி வெளியாகவுள்ள கருப்பு படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாற வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கர சாமி, கருப்பசாமி என தமிழ் சினிமாவில் கிராமத்து தேவதைகளின் கதைகளும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X