தனுஷுக்கு இரண்டாவது திருமணமா?.. கோலிவுட்டில் பரவும் பரபர தகவல்.. உண்மை என்ன?

சென்னை: கோலிவுட்டின் முன்னணி நடிகரான தனுஷும், ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யாவும் விவாகரத்து வேண்டி நீதிமன்றம் சென்றிருக்கிறார்கள். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். எப்படியாது தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைத்திட வேண்டும் என்று குடும்பத்தார் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்துவிட்டதாக கூறுகிறார்கள். சூழல் இப்படி இருக்க தனுஷுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க திட்டம் இருப்பதாக புதிய தகவல் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக அடையாளப்பட்டிருக்கிறார் தனுஷ். அவரது வயதுக்கு மீறிய கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அசராமல் நடிக்கும் அசுரனாக உயர்ந்து நிற்கிறார். அவர் துள்ளுவதோ இளமையில் அறிமுகமானபோது அவரைப் பார்த்து பலரும் உருவ கேலி செய்தார். ஆனால் இப்போது ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அந்த அளவுக்கு தனது திறமையை போட்டு வளர்ந்திருக்கிறார் தனுஷ்.

Dhanush getting married for the second time Here are the details

செல்வராகவன் உளி: தனுஷுக்குள் ஒரு மிகச்சிறந்த நடிகர் இருக்கிறார் என்பதை ஆரம்பகாலகட்டத்தில் வெளிச்சம் போட்டு காட்டிய படங்கள் என்றால் காதல் கொண்டேன், புதுப்பேட்டைதான். இரண்டு படங்களையும் செல்வராகவன் இயக்கியிருந்தார். அந்த இரண்டு படங்களில் தனுஷ் ஏற்றிருந்த கதாபாத்திரங்கள் அவரது வயதுக்கு மீறியவை. ஆனால் அதை ரொம்பவே அசால்ட்டாக செய்துகாட்டினார் தனுஷ்.

தேசிய விருது: தனுஷின் கரியரில் உச்சம் என்றால் ஆடுகளம் படம். வெற்றிமாறன் இயக்கிய அந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். அதேபோல் அசுரன் படத்துக்காகவும் தேசிய விருது வென்றிருந்தார். இதற்கிடையே பாலிவுட்டில் தடம் பதித்த தனுஷ் அடுத்ததாக ஹாலிவுட்டுக்கும் சென்று அசத்தினார். கடைசியாக தமிழில் அவர் கேப்டன் மில்லர் படத்தில் நடித்தார். படம் சுமாரான வரவேற்பையே பெற்றது.

பன்முக கலைஞர்: நடிகராக மட்டுமின்றி இயக்குநர் டிப்பார்ட்மெண்ட்டிலும் கலக்கிக்கொண்டிருக்கிறார். ராஜ்கிரணை வைத்து பவர் பாண்டி படத்தை இயக்கிய தனுஷ், அடுத்ததாக தனது 50ஆவது படமான ராயன் படத்தை தானே இயக்கி நடித்திருக்கிறார். அதேபோல் பாடல் பாடுவது, பாடல்கள் எழுதுவது என சினிமாவின் பல ப்ளாட்ஃபார்ம்களில் தனது ஆளுமையை நிரூபித்துவருகிறார். இப்போது சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்திருக்கிறார். மேலும் இளையராஜாவின் பயோபிக்கிலும் நடிக்கிறார் அவர்.

பிரிவு: இதற்கிடையே ரஜினிகாந்த்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருந்த சூழலில்; கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து பிரிவில் முடிந்திருக்கிறது. இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருக்கின்றனர். இது ஒட்டுமொத்த கோலிவுட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது

இரண்டாவது திருமணம்: இருவரையும் சேர்த்து வைக்க 2 குடும்பத்தினரும் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டன. இந்தச் சூழலில் தனுஷ் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இப்போது 40 வயதாகும் தனுஷுக்கு இரண்டாவது திருமணம் செய்துவைக்க அவரது தந்தை கஸ்தூரி ராஜா விரும்புவதாகவும்; அதுகுறித்து தனுஷிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறார், ஆனால் தனுஷோ பிடியே கொடுக்கவில்லை என்று திரைத்துறையில் தகவல்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X