“நானே வருவேன்“ படத்திற்காக குண்டான தனுஷ்.... அட… ஆமாம்… ஆளேமாறிவிட்டாரா!
சென்னை : நானே வருவேன் படத்திற்காக தனுஷ் அதிக அளவில் உடல் எடையை அதிகரித்து குண்டாக காணப்படுகிறார்.
நானே வருவேன் படப்பிடிப்பு தளத்திலிருந்து நடிகர் தனுஷ் மற்றும் செல்வராகவன், கதாநாயகி எல்லி அவ்ரம் ஆகியோருடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது.
இந்த போட்டோவில் தனுஷ் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் எடை கூடி காணப்படுகிறார். இந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் வாய்பிளந்து வருகின்றனர்.

பல ஆண்டுகளுக்குப்பிறகு
மயக்கம் என்ன திரைப்படத்திற்குப் பிறகு சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ், செல்வராகவன் இணைந்துள்ள படம் நானே வருவேன். இந்தப் படத்தில் தனுஷ் வயதானவராகவும், இளைஞராகவும் என இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கிறார். நடிகர் தனுஷ் இயக்குநர் செல்வராகவன் கூட்டணி, ஏற்கெனவே 3 வெற்றி படங்களை கொடுத்துள்ள நிலையில், நான்காவது முறையாக நீண்ட வருடங்களுக்குப் பிறகு இருவரும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.

நானே வருவேன்
இதனால், நானே வருவேன் படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இந்தப் படத்தின் இயக்குநரான செல்வராகவன், முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். இந்துஜா ரவிச்சந்திரன், ஸ்வீடனைச் சேர்ந்த எல்லி அவ்ரம், யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். யுவன்சங்கர் ராஜா இசையமைக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

குண்டான தனுஷ்
இந்நிவைலயில், நானே வருவேன் படப்பிடிப்பு தளத்திலிருந்து நடிகர் தனுஷ் மற்றும் செல்வராகவன், எல்லி அவ்ரம் ஆகியோருடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தில் தனுஷின் ஹேர் ஸ்டைல் வித்தியாசமாக உள்ளது. மேலும், இந்த படத்திற்காக தனுஷ் அதிக அளவில் உடல் எடையை அதிகரித்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர், இத்தனை வருஷத்தில் இப்படி தனுஷை பார்த்ததே இல்லை என்றும், ஆளே அடையாளம் தெரியாதது போல் இருக்கிறார் என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

பிரபு இணைந்துள்ளார்.
அண்மையில் நானே வருவேன் படத்தின் புதிய போஸ்டரை செல்வராகவன் வெளியிட்டு வைரலான நிலையில், படப்பிடிப்பு தளத்திலிருந்து இந்தப் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். இதற்கிடையில், இந்தப் படத்தில் நடிகர் பிரபு இணைந்துள்ளார். தனுஷ் நடித்த '3' படத்திற்குப் பிறகு நடிகர் பிரபு, அவருடன் இரண்டாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











