உயிருக்கு போராடும் நடிகர்.. பழசை மறக்காத தனுஷ் செய்த உதவி.. எத்தனை லட்சம் தெரியுமா?
சென்னை: துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுடன் நடிகராக அறிமுகமானவர் அபிநய். அந்தப் படத்துக்கு பிறகு தொடர்ந்து சில படங்களில் நடித்த அவருக்கு வாய்ப்புகள் முறையாக வரவில்லை. எனவே சினிமாவிலிருந்து ஒதுங்கிவிட்டார். இப்போது கல்லீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அண்மையில்தான் கலக்கப்போவது யாரு பாலா அவருக்கு உதவி செய்த சூழலில்; இப்போது தனுஷும் உதவி செய்திருக்கிறார்.
தனுஷ் நடிகராக அறிமுகமான திரைப்படம் துள்ளுவதோ இளமை. அந்தப் படத்தின் கதை செல்வராகவன் எழுதி; பாதி இயக்கினார். ஆனால் இயக்குநர் என்ற இடத்தில் அவர்களின் தந்தை கஸ்தூரி ராஜாவின் பெயர் இருந்தது. அப்படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும்; அப்படத்தில் அறிமுகமானவர்கள் பின் நாட்களில் பெரிய ஸ்டார்களாக வளர்ந்தார்கள். அவர்களில் அறிமுகமானவர்தான் அபிநய்.
அபிநய்யின் அடுத்த படங்கள்: அப்படத்தில் அனைவருக்குமே முக்கியமான ரோல்தான் கொடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அபிநய் அதில் தனித்து தெரிந்தார். ஏனெனில் ஹீரோவாகக்கூடிய அத்தனை விஷயங்களும் அவருக்கு இருந்தது. அவரும் சிறப்பாகவே நடித்திருந்தார். அப்படத்துக்கு பிறகு தாஸ், ஜஞ்ஷன், பொன் மேகலை, சொல்ல சொல்ல இனிக்கும், பாலைவன சோலை உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.

குறைந்த வாய்ப்பு: ஆனால் அவர் நடித்த படங்கள் அவருக்கு பெரிய பிரேக் பாயிண்ட்டை எதுவும் கொடுக்கவில்லை. இதன் காரணமாக படிப்படியாக அபிநய்க்கு வாய்ப்புகள் குறைந்தன. ஒருகட்டத்தில் மொத்தமாக வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவிலிருந்து ஒதுங்கிவிட்டார். பிறகு சில தொழில்களை செய்துவந்த அவர்; ஆட்டோ ஓட்டியதாகவும் ஒரு தகவல் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லீரல் பாதிப்பு: அபிநய்க்கென்று யாரும் இல்லை. சூழல் இப்படி இருக்க அவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சிகிச்சைக்கு சுத்தமாக பணம் இல்லாததால் தனக்கு உதவ வேண்டுமென்று கோரிக்கையையும் வைத்தார். அவரது அவல நிலையை பார்த்த கலக்கப்போவது யாரு பாலா உடனடியாக சென்று அபிநய்க்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்து தைரியம் கொடுத்தார். அவர் மட்டுமின்றி இன்னும் சிலரும் உதவிகள் செய்ய தொடங்கினார்கள்.
தனுஷ் செய்தது: எத்தனை பேர் செய்தாலும் தனுஷ் என்ன செய்யப்போகிறார் என்பதில்தான் பலரது கவனம் இருந்தது. இந்நிலையில் அபிநய்க்கு தனுஷ் ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்திருக்கிறார். துள்ளுவதோ இளமை படத்தில் நடித்தபோது தனுஷும், அபிநய்யும் ரொம்பவே க்ளோஸ் நண்பர்களாக இருந்தார்கள் என்றும்; பிற்காலத்தில் தனுஷ் பிஸியாகிவிட இந்த நட்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்ததாகவும் பேச்சுக்கள் உண்டு. ஆனால் இப்போது அபிநய்க்கு தனுஷ் உதவியிருப்பதை பார்த்த அவரது ரசிகர்கள்; எப்போதும் பழையதை தனுஷ் மறக்கமாட்டார் என்று கமெண்ட்ஸ் செய்து வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











