»   »  'நெருப்புடா.. நெருங்குடா.. பார்ப்போம்' - முன்னணி நடிகர்களுக்கே சவால் விடும் தனுஷ்!

'நெருப்புடா.. நெருங்குடா.. பார்ப்போம்' - முன்னணி நடிகர்களுக்கே சவால் விடும் தனுஷ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகர் தனுஷ் ட்விட்டரில் 6 மில்லியன் பின் தொடர்பாளர்களைக் கடந்து புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறார்.

தென்னிந்திய அளவில் மிக பிரபலமான நடிகர் தனுஷ். தமிழ் நடிகரான தனுஷ் தற்போது ஹாலிவுட் படம் வரை சென்றுள்ளார். ஹாலிவுட்டில் 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபாகிர்' படத்தில் நடித்திருக்கிறார்.

தமிழில் பல முகங்களைக் காட்டிவரும் தனுஷுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதன் மூலமே 6 மில்லியன் ஃபாலோயர்களை அடைந்திருக்கிறார்.

உலகப் புகழ்

உலகப் புகழ்

'கொலவெறி' பாடலின் மூலம் உலகமெங்கும் நுழைந்தவர் தனுஷ். அந்தப் பாடலுக்கு மொழி தெரியாதவர்கள் கூட ஆடி, சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர். தனது ட்ரெண்டியான முயற்சிகளால் ரசிகர்களை அதிகமாக ஈர்த்து வருகிறார் தனுஷ்.

வெற்றிகள் குவித்த தனுஷ்

வெற்றிகள் குவித்த தனுஷ்

இந்த இளம் வயதில் பல வெற்றிகளுக்கும், விருதுகளுக்கும் சொந்தக்காரர் தனுஷ். நடிகரான இவர் 'ப.பாண்டி' படத்தை இயக்கி இயக்குநராகவும் அறிமுகமானார். தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களை தனது 'வுண்டர்பார்' நிறுவனம் மூலம் தயாரித்தும் வருகிறார்.

6 மில்லியன்

6 மில்லியன்

தனுஷை ட்விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 6 மில்லியனை கடந்துள்ளது. தமிழ் நடிகர்களில் இந்த மைல்கல்லை முதலில் தொட்டவர் தனுஷ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் ரசிகர்கள் இந்த மகிழ்ச்சியை ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

ஃபேஸ்புக்கில் தனுஷ்

ஃபேஸ்புக்கில் தனுஷ்

நடிகர் தனுஷின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தை 4.7 மில்லியன் பேர் ஃபாலோ செய்கிறார்கள். தனுஷ் அவ்வப்போது புதிய தகவல்களை ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பகிர்ந்து கொள்வது வழக்கம். அதன் மூலமே இவ்வளவு ஃபாலோயர்ஸ் கிடைத்திருக்கிறார்கள்.

சூப்பர்ஸ்டார் பின்னாடிதான்

சூப்பர்ஸ்டார் பின்னாடிதான்

சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு ட்விட்டரில் 4.3 மில்லியன் ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள். நடிகர் விஜய்க்கு 1.35 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். உலகநாயகன் கமல்ஹாசனுக்கு 2.82 மில்லியன் ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள்.

English summary
Actor Dhanush has crossed 6 million followers on Twitter. It is noteworthy that Dhanush is the first Tamil actor to hit this milestone. Dhanush fans are celebrating this happiness on Twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil