தனுஷுக்கு இந்த மூஞ்சி.. பங்கமாக கலாய்த்த பாலிவுட் இயக்குநர்.. ஆத்தாடி இப்படி சொல்லிருக்காரே

சென்னை: ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மெய்ன் படத்தில் நடித்திருக்கிறார் தனுஷ். நவம்பர் 28ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது. இதனையொட்டி ப்ரோமோஷன் பணிகள் பயங்கரமாக நடந்துவருகின்றன. தனுஷ் மற்றும் படக்குழுவினர் மும்முரமாக அதில் கலந்துகொண்டு பேசிவரும் விஷயங்கள் எல்லாம் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. அந்தவகையில் தனுஷ் இப்போது பேசியிருப்பதும் ட்ரெண்டாகியிருக்கிறது.

தனுஷுக்கு திருச்சிற்றம்பலம் படத்துக்கு பிறகு பெரிய ஹிட் எதுவும் கிடைக்காமல் இருந்தது. அவர் நடித்த வாத்தி, கேப்டன் மில்லர், குபேரா ஆகிய படங்கள் மீது அவருக்கு நம்பிக்கை இருந்தாலும்; ரசிகர்கள் கொண்டாடவில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான் இட்லி கடை படத்தை தானே இயக்கி நடித்தார். இப்படம் அவர் எதிர்பார்த்த வெற்றியை கொடுத்ததால் நிம்மதியடைந்தார்.

ஹிந்தியில் தனுஷ்: இதற்கிடையே பாலிவுட்டிலும் கலக்கிவரும் அவர் ராஞ்சனா இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மெய்ன் படத்தில் நடிக்க கமிட்டானார். இதில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை பெற்றிருக்கிறது. ஏனெனில் தனுஷ் - ஆனந்த் இணைந்திருந்த ராஞ்சனா மெகா ஹிட்டாகியிருக்கிறது. எனவே அதே ரிசல்ட்டை இதிலும் எதிர்பார்க்கிறார்கள்.

Dhanush has said that the director of Tere ishk Mein told him that his face is that of a love failure face
Photo Credit:

ஹிட்டாகுமா?: படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதனை பார்க்கையில் கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையை கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். இப்படமும் காதல் ஜானரில்தான் உருவாகியிருக்கிறது என்பதை ட்ரெய்லர் உறுதிப்படுத்துகிறது. கண்டிப்பாக இக்கூட்டணியிடமிருந்து ஒரு ஃபீல் குட் படத்தை எதிர்பார்க்கலாம் என்ற பேச்சுக்கள் சோஷியல் மீடியாவில் சத்தமாகவே கேட்கின்றன.

சூடுபிடிக்கும் ப்ரோமோஷன் பணிகள்: படமானது நவம்பர் 28ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதனையோட்டி படக்குழு தீவிரமான ப்ரோமோஷனில் ஈடுபட்டிருக்கிறது. சமீபத்தில்கூட துபாயில் நடந்த வாட்ச் வீக் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஏராளமான விஷயங்களை பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்னொரு ப்ரோமோஷனில் கலந்துகொண்ட அவர் பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாகியிருக்கிறது.

தனுஷின் பேச்சு: அவர் அந்த ப்ரோமோஷனில் பேசுகையில், "இப்படிப்பட்ட கேரக்டரில் நடிப்பதற்கு எதற்காக என்னை அழைக்கிறீர்கள் என்று இயக்குநரின் கேட்டேன். அதற்கு அவரோ உனக்கு தான் லவ் ஃபெயிலியர் முகம் சரியாக இருக்கிறது என சொன்னார். அன்று நான் வீட்டுக்கு போன பிறகு கண்ணாடியில் எனது முகத்தை பார்த்துக்கொண்டே இருந்தேன். அவர் அன்று கிண்டலாக சொன்னாலும் அதனை நான் எனக்கான பாராட்டாகவும் எடுத்துக்கொண்டேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X