இட்லி கடையால் வந்த பாசம்.. அருண் விஜய்க்காக தனுஷ் என்ன செய்திருக்கார் பாருங்க?
சென்னை: தனுஷின் நடிப்பில் அடுத்ததாக குபேரா, இட்லி கடை ஆகிய படங்கள் வரவிருக்கின்றன. கடைசியாக அவர் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அதேபோல் அவர் இயக்கி நடித்த ராயன் திரைப்படமும் படுதோல்வியைத்தான் சந்தித்தது. இதனால் எப்படியாவது ஒரு வெற்றியை கொடுத்துவிட வேண்டுமென்பதில் அவர் முனைப்பாக இருக்கிறார். இந்தச் சூழலில் அருண் விஜய்க்காக அவர் செய்திருக்கும் செயலை பார்த்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என கலக்கிவருபவர் தனுஷ். நடிப்பு மட்டுமின்றி இயக்கம், பாடல்கள் பாடுவது, எழுதுவது, படங்களை தயாரிப்பது என அனைத்து ஜானர்களிலும் கலக்குபவர். அவரது நடிப்பில் கடைசியாக ராயன் திரைப்படம் வந்தது. அவரது 50ஆவது படமான அதனை அவரே இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. நல்ல எதிர்பார்ப்போடு வெளியான அடம் படுதோல்வியை சந்தித்தது. மேலும் பல படங்களின் கலவைதான் அந்தப் படம் என்றும் ரசிகர்கள் அடி அடி என்று அடித்தனர்.
இட்லி கடை தனுஷ்: தனுஷ் இப்போது சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் அவருடன் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படம் சிறப்பாக வந்திருப்பதாக இயக்குநர் தெரிவித்திருக்கிறார். இந்தப் படத்துக்கு பிறகு தானே இயக்கி இட்லி கடை படத்திலும் நடித்திருக்கிறார். இதில் நித்யா மேனன் ஹீரோயினாக கமிட்டாகியிருக்கிறார். அருண் விஜய் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

தள்ளிப்போன இட்லி கடை: கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படமும், நடிப்பில் வெளியான ராயன் திரைப்படமும் தோல்வியை சந்தித்தன. இதன் காரணமாக இட்லி கடை மீது பெரிய நம்பிக்கையை வைத்திருக்கிறார்.முதலில் அந்தப் படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாவதால் இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயிருப்பது குறிப்பிடத்தக்கது.
அருண் விஜய்க்காக தனுஷ் செய்த செயல்: இந்நிலையில் இட்லி கடை படத்தில் நடித்தபோது தனுஷுக்கும் அருண் விஜய்க்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அந்த நட்பு இப்போது ரெட்ட தல படத்திலும் தொடர்கிறது. அதாவது அந்தப் படத்தில் அருண் விஜய்க்காக தனுஷ் ஒரு பாடலை பாடியிருக்கிறார். படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இதுகுறித்த அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் பாடியிருக்கும் இந்தப் பாடலை வெளிநாட்டில் படமாக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
திருக்குமரன் இயக்கம்: இந்தப் படத்தை மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கியிருக்கிறார். இதில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். கடந்த பல வருடங்களாகவே அருண் விஜய் திரைத்துறையில் தனக்கான ஒரு இடத்தை பிடிக்க போராடுகிறார். நல்ல நடிகர் என்று பெயர் எடுத்தாலும் பெரிய வெற்றி எதுவும் பெறாமல் இருந்தார். கடைசியாக அவருக்கு பாலா இயக்கிய வணங்கான் படம் ஓரளவுக்கு வெற்றியை கொடுத்தது. இப்போது இந்த ரெட்ட தல படமும் அவருக்கு வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











