»   »  இந்தியில் நடிப்பதைத் தொடர்வேன்.. ஆனால் மும்பையில் குடியேறும் திட்டமில்லை! - தனுஷ்

இந்தியில் நடிப்பதைத் தொடர்வேன்.. ஆனால் மும்பையில் குடியேறும் திட்டமில்லை! - தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாலிவுட்டில் தொடர்ந்து நடிப்பேன். ஆனால் அதற்காக மும்பையிலேயே குடியேறிவிடுவேன் என்று வரும் செய்திகளில் உண்மையில்லை என்று நடிகர் தனுஷ் கூறினார்.

ராஞ்ஜனா படத்துக்குப் பிறகு, ஷமிதாப் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்தப் படத்துக்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. இதனைத் தொடர்ந்து தனுசுக்கு இந்தி பட வாய்ப்புகள் குவிகின்றன.

பாலிவுட்டிலேயே

பாலிவுட்டிலேயே

இதனால் நிரந்தரமாக மும்பையில் குடியேற அவர் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக அங்கு வீடு பார்ப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொள்ளத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

புதிய இந்திப் படங்கள்

புதிய இந்திப் படங்கள்

அடுத்து இரண்டு புதிய இந்திப் படங்களில் நடிக்க பேச்சு நடப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இரண்டுமே பெரிய பட்ஜெட் படங்கள் என்கிறார்கள்.

வதந்திதான்

வதந்திதான்

இதுகுறித்து தனுசிடம் கேட்டபோது, "நான் இந்தி படங்களில் மட்டுமே நடிப்பேன் என்றும், மும்பையில் குடியேறுவேன் என்றும் சொல்லப்படுவது வதந்திதான். தமிழ் படங்களை விட்டு விலக மாட்டேன்.

மும்பையில் குடியேற மாட்டேன்

மும்பையில் குடியேற மாட்டேன்

நடிகர் என்ற முறையில் எல்லா மொழி படங்களிலும் நடிப்பேன். மும்பையில் தங்குவேன். ஆனால் அங்கேயே குடியேறிவிட மாட்டேன்," என்றார்.

English summary
Dhanush has denied reports about his plans to shift his residence to Mumbai.
Please Wait while comments are loading...