ஏற்கனவே உள்ள பிரச்னை போதாதா?.. தனுஷுக்கு வந்த உடல்நல பிரச்னை?.. என்ன ஆச்சு?
சென்னை: குபேரா படத்தில் நடித்து முடித்திருக்கும் தனுஷ் தற்போது இட்லி கடை படத்தை இயக்கி நடித்துவருகிறார். இதற்கிடையே தனது சகோதரி மகனையும், அனிகா சுரேந்திரன் உள்ளிட்டோரையும் வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தையும் இயக்கி முடித்திருக்கிறார். சூழல் இப்படி இருக்க தனுஷுக்கு விவாகரத்தும் சமீபத்தில் நடந்தது. இந்நிலையில் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று புதிய தகவல் கோலிவுட்டில் வட்டமடிக்க ஆரம்பித்திருக்கிறது.
தனுஷின் நடிப்பில் கடைசியாக ராயன் திரைப்படம் வெளியானது. அது அவருக்கு 50ஆவது திரைப்படம் ஆகும். அதனை அவரே இயக்கி நடிக்கவும் செய்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவான அந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. திரைக்கதை, மேக்கிங் என எதுவுமே தங்களோடு ஒன்றவில்லை என்று ரசிகர்கள் ஓபனாகவே கூறினார்கள். மேலும் ஓடிடியில் வெளியானபோதும் கடுமையான ட்ரோலை அந்தப் படம் சந்தித்தது.

அடுத்த படம்: இதற்கிடையே சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடிக்க கமிட்டானார் அவர். அதில் அவருடன் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஏற்கனவே வாத்தி படத்தின் மூலம் தெலுங்கில் தனக்கான மார்க்கெட்டை உயர்த்திவிடலாம் என்று அவர் நினைக்க; அந்த கணக்கு பொய்த்துப்போனது. எனவே குபேரா படத்தை வைத்து அந்தக் கணக்கை சரிக்கட்ட நினைத்திருக்கிறார் அவர். படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் மும்முரமாக நடந்துவருகின்றன.
இட்லி கடை: சூழல் இப்படி இருக்க இட்லி கடை என்ற படத்தை இயக்கியும், நடித்தும் வருகிறார். இதில் நித்யா மேனன் ஹீரோயினாக நடித்துவருகிறார். அருண் விஜய்யும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பவர் பாண்டி படத்தை இயக்கி கவனத்தை ஈர்த்த தனுஷ் ராயன் படத்தில் சறுக்கினார். எனவே இந்தப் படத்தில் இயக்கத்திலும் தன்னை நிரூபித்தே ஆக வேண்டும் என்ற முனைப்பில் அவர் வேலை செய்துவருவதாக படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரத்திலிருந்து தகவல்கள் கசிந்திருக்கின்றன.
பப்லு பிரித்விராஜிடம் இருந்து பல லட்சம் சுருட்டிட்டு ஓடினாரா மாஜி காதலி.. உண்மையை உடைத்த ஷீத்தல்!
உடல்நல பிரச்னை: படத்தின் முதல் ஷெட்யூல் தேனியில் தொடங்கி நடந்துவருகிறது. அதில் முக்கியமான காட்சிகள அனைத்தையும் தனுஷ் ஷூட் செய்துவந்தார். இந்த ஷெட்யூலை முடித்துவிட்டு முதுகுளத்தூரில் ஒரு சண்டை காட்சியையும், தாய்லாந்தில் ஒரு பாடலையும் படமாக்க திட்டமிட்டிருந்தார் அவர். ஆனால் திடீரென அத்தனை ஷெட்யூல்களும் கேன்சல் செய்யப்பட்டிருப்பதாகவும்; அதற்கு தனுஷின் உடல்நிலை சரியில்லாததுதான் காரணம் என்றும் புதிய தகவல் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த பிரச்னையுமா?: மேலும் அவர் ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு சென்னை திரும்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக சமீபத்தில்தான் தனுஷுக்கும் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் விவாகரத்து நடைபெற்றது. மேலும் நயன்தாராவுடனும் தனுஷுக்கு ஒரு பிரச்னை ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி பல பிரச்னைகள் அவரை சுற்றிக்கொண்டிருக்க இப்போது உடல்நல பிரச்னை வேறு வந்துவிட்டதே என்று அவரது ரசிகர்கள் வேதனையுடன் கூறிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











