கைவசம் ஏராளமான படங்கள்.. சம்பளத்தை உயர்த்திவிட்டாரா தனுஷ்?.. வெளியான லேட்டஸ்ட் தகவல்

சென்னை: தனுஷ் நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. ஆனால் அந்தப் படம் அவர் எதிர்பார்த்த ரிசல்ட்டை அவருக்கு கொடுக்கவில்லை. இந்தச் சூழலில் தனது 50ஆவது படமான ராயன் படத்தை இயக்கியிருக்கும் அவர் அடுத்ததாக சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துவருகிறார். ராயன் படம் அடுத்த மாதம் வெளியாகவிருக்கிறது. மேலும் இளையராஜாவின் பயோபிக்கிலும் நடிக்கிறார் தனுஷ். அடுத்ததாக போர் தொழில் படத்தின் இயக்குநருடன் அவர் இணையவிருப்பதாக கூறப்படும் சூழலில் அவர் பற்றி புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான தனுஷ் பல விமர்சனங்களை கடந்து இன்று மிகச்சிறந்த நடிகர் என்ற இடத்தில் இருக்கிறார். தமிழ் சினிமாவில் இவர் எல்லாம் நிலைக்கவே மாட்டார் என்று பலரும் கூறினர். ஆனால் அவர்களின் கணிப்பை தவிடுபொடியாக்கி கோலிவுட்டிலிருந்து ஹாலிவுட்வரை சென்றிருக்கிறார் தனுஷ். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் ரொம்பவே அசால்ட்டாக ஸ்கோர் செய்துவிடும் அவர் ஆடுகளம், அசுரன் படங்களுக்காக தேசிய விருதையும் வாங்கியிருக்கிறார்.

Dhanush Kubera Ilayaraaja

கேப்டன் மில்லர்: அவரது நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்கியிருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீஸான அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. மேலும் எழுத்தாளர் வேல ராமமூர்த்தியும் படத்தின் கதை தனது பட்டத்து யானை நாவலின் கதை என்றும் கூறி பரபரப்பை கிளப்பினார்.

ராயன்: சில மாதங்களுக்கு முன்பு தனுஷ் 50 படத்தின் பெயரும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டன.அவரே இயக்கி நடிக்கும் படத்துக்கு ராயன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் போஸ்டரில் தனுஷ் கையில் ரத்தம் படிந்த கத்தியுடன் கெத்தாக நிற்க; அவருக்கு பின்னால் காளிதாஸ் ஜெயராமும், சந்தீப் கிஷனும் ஒரு ஃபாஸ்ட் புட் கடை செட்டப்பிலிருந்து எட்டி பார்க்கும்படி இருந்தார்கள். படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி சூப்பர் ரெஸ்பான்ஸ் பெற்றன. படம் ஜூலை 26ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

இளையராஜா பயோபிக்: இதற்கிடையே இளையராஜாவின் பயோபிக்கும் உருவாகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், கமல் ஹாசனின் திரைக்கதையில் உருவாகும் அப்படத்தில் இளையராஜாவாக தனுஷ் நடிக்கிறார். மேலும் சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்திலும் இப்போது நடித்துவருகிறார். இவை தவிர்த்து மாரி செல்வராஜுடன் ஒரு படத்திலும், அருண் மாதேஸ்வரனுடன் இன்னொரு படத்திலும் இணையவிருக்கிறார் தனுஷ்.

போர் தொழில்: சூழல் இப்படி இருக்க சமீபத்தில் தனுஷின் புதிய படம் குறித்த தகவல் வெளியானது. . அதன்படி போர் தொழில் படத்தை இயக்கி வெகுவாக கவனம் ஈர்த்த விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனுஷ் தனது சம்பளத்தை உயர்த்திவிட்டதாக கூறப்படுகிறது. அதன்படி தனது சம்பளத்தை 45 கோடி ரூபாயாக உயர்த்தியிருப்பதாகவும்; படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் கோலிவுட்டில் பேச்சு எழுந்திருக்கிறது. அதேசமயம் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான கேப்டன் மில்லர் சுமாரான வரவேற்பையே பெற்றாலும் தனுஷ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரே என்ற முனுமுனுப்பும் கேட்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X