நானும், ராஷ்மிகாவும் விழுந்து, பிரண்டு.. அதெல்லாம் ரியல்தான்.. குபேரா சீக்ரெட் சொன்ன தனுஷ்
சென்னை: சேகர் கம்முல்லா இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் குபேரா திரைப்படம் நாளை வெளியாகவிருக்கிறது. ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. கண்டிப்பாக இது தனுஷுக்கு தரமான கம்பேக்காக அமையும் என்று ட்ரெய்லரை பார்த்த அவரது ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். இருப்பினும் படத்தின் டிக்கெட் புக்கிங் டல்லடித்திருப்பதும் கவனிக்கத்தக்கது.
ராயன் படத்தை இயக்கியும், நடித்தும்; நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கியும் தோல்வியை சந்தித்த தனுஷ் இப்போது சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தெலுங்கு திரையுலகில் சேகருக்கென்று பெரிய பெயர் இருக்கிறது. ஏற்கனவே வாத்தி படத்தில் வெங்கி அட்லூரியுடன் இணைந்து தோல்வியை சந்தித்த தனுஷு; கண்டிப்பாக் சேகர் கம்முல்லாவுடன் இணைந்து பெரிய வெற்றியை பெற வேண்டும் என இருக்கிறார்.
குபேரா: படத்தின் பெயர் குபேரா என்று வைக்கப்பட்டாலும் தனுஷ் இதில் பிச்சைக்காரராக நடித்திருக்கிறார். ஒரு பிச்சைக்காரர் பணக்காரர் ஆவதுதான் படத்தின் மைய சரடு என்று கூறப்பட்டாலும்; கண்டிப்பாக படத்தில் வித்தியாசமாக ஏதேனும் இருக்கும் என்ற நம்பிக்கை தனுஷின் ரசிகர்களிடம் அதிகமாகவே இருக்கிறது. அதைத்தான் சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெய்லரும் உறுதிப்படுத்தியிருப்பதாக அவரது ஃபேன்ஸ் கூறுகிறார்கள்.

தேசிய விருது கன்ஃபார்ம்?: தனுஷ் ஏற்கனவே ஆடுகளம், அசுரன் ஆகிய படங்களுக்காக தேசிய விருதினை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க குபேரா படத்தில் நடித்ததற்காக அவருக்கு கண்டிப்பாக நேஷனல் அவார்டு கிடைக்கும் என்று படத்தின் இயக்குநர் சேகர் கம்முல்லாக உறுதியாக கூறியிருப்பதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிப்பதற்கு காரணங்களில் ஒன்றாக இருக்கிறது.
தனுஷின் பேச்சு: சமீபத்தில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. அதில் பேசிய தனுஷ், தன்னை பற்றி வதந்தி பரப்புபவர்களுக்கு தரமான பதிலடியை கொடுத்திருந்தார். அவர் மறைமுகமாக நயன்தாரா, சுசித்ரா உள்ளிட்டோரைத்தான் தாக்கி பேசியிருக்கிறார் என்று பலரால் கருதப்படுகிறது. மேலும் தனது ரசிகர்கள் குறித்தும்; அவர்கள்தான் தன்னுடைய பலம் என்றும் பெருமையாகவும் அந்த மேடையில் பேசியிருந்தார். அதேசமயம் அவர் அப்படி பேசியது பெரிய ட்ரோலையும் அவருக்கு சம்பாதித்துக்கொண்டிருக்கிறது.
டிக்கெட் புக்கிங் டல்: இது ஒருபக்கம் இருக்க படம் நாளை ரிலீஸாகவிருக்கும் நிலையில் படத்தின் டிக்கெட் புக்கிங் சொல்லிக் கொள்ளும்படி இல்லாதது படக்குழுவுக்கும், தனுஷ் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. ஆனாலும் கண்டிப்பாக இப்படம் நல்ல விதமான வெற்றியை பெறும் என்பதில் அவர்கள் உறுதியாகவே இருக்கிறார்கள். இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா குறித்து தனுஷ் பேசியிருப்பது ட்ரெண்டாகியிருக்கிறது.
தனுஷ் பேச்சு: குபேரா ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய அவர், "ராஷ்மிகா மந்தனா ரொம்பவே டெடிகேட்டான நடிகை. இந்தப் படத்துக்காக குப்பை மேடு, குப்பை கிடங்கு, குப்பை லாரி என பல இடங்களில் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறோம். அந்த இடங்களில் எல்லாம் நானும் அவரும் ஒன்றாக விழுந்து பிரண்டிருக்கிறோம். அதெல்லாம் போலியான குப்பைகள்தானே என்று இயக்குநரிடம் கேட்டால், இல்லை இல்லை அதெல்லாம் உண்மையான குப்பைகள் தான் என்று சொல்வார்" என்றார். பிச்சைக்கார கதாபாத்திரத்திற்காக தனுஷ் ரொம்பவே மெனக்கெட்டு நடித்துள்ள இந்த குபேரா திரைப்படம் அவருக்கு பல விருதுகளையும் பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











