தனுஷ்…. துள்ளுவதோ இளமை டூ ராஞ்சனா

By Mayura Akilan

கோலிவுட் படங்களில் கோலோச்சிய தனுஷ் இப்போது பாலிவுட்டிலும் அறிமுகப் படத்திலேயே பட்டையை கிளப்பி வருகிறார்.
முதல் படத்திலேயே சொந்தக்குரலில்இந்தி டப்பிங் பேசி அசத்திய தனுஷ், என்னால் என்ன முடியுமோ அதை செய்திருக்கிறேன் என்று டுவிட்டியுள்ளார்.

இது இப்படியிருக்க பாலிவுட் கனவுக் கன்னிகளும், பிரபல இயக்குநர்கள், நடிகைகளுக்கும் கூட செல்லப்பிள்ளையாகிவிட்டார் தனுஷ்.

'கான்' களின் நடிப்பில் மனதை பறிகொடுத்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டு இளம்பெண்கள் இருக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் இருந்து போய் வட இந்தியர்களின் மனதை கவர்ந்து விட்டார் தனுஷ்.

பள்ளிப் பருவ நடிப்பு

பள்ளிப் பருவ நடிப்பு

துள்ளுவதோ இளமையில் பள்ளி சீறுடை போட ஆரம்பித்த தனுஷ் நடிக்க வந்து பத்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இன்னமும் பள்ளி சீருடையில்தான் நடித்து வருகிறார். அவருடைய பையன் கூட இப்போது பள்ளிக்கு போக ஆரம்பித்துவிட்டார்.

அப்பாவித் தோற்றம்

அப்பாவித் தோற்றம்

தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் தனித்துவத்துடன் நடித்து தன்னுடைய பங்கினை சிறப்பாக செய்திருப்பார் தனுஷ். இதில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் காதல் கொண்டேன் கொண்டேன் படத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்தது அனைவரின் பாராட்டினை பெற்றது.

மனைவியின் இயக்கத்தில்

மனைவியின் இயக்கத்தில்

தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் 3 படத்தில் பள்ளி மாணவனாக நடித்தார். இதிலும் மனநலம் குன்றியவராக நடித்தார். இதேபோல் மயக்கம் என்ன படத்திலும் போட்டோகிராபராக நடித்ததோடு மனநலம் பாதிக்கப்பட்டராக நடித்திருப்பார்.

கொலைவெறி ஹிட்

கொலைவெறி ஹிட்

பல படங்களில் பாடல்கள் எழுதியிருந்தாலும் 3 படத்தின் கொலைவெறி பாடல் நாடுமுழுவதும் ஹிட் அடித்தது. தனுஷ் புகழ் பாலிவுட் வரை பரவியது.

ராஞ்சனாவின் ஹிட்

ராஞ்சனாவின் ஹிட்

முதன்முறையாக ராஞ்சனா படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் தனுஷ் பள்ளி மாணவனாக பட்டையை கிளப்பியிருக்கிறாராம். உடன் நடித்த சோனம் கபூர் எனக்கு தனுஷ் மாதிரி புருஷன் வேண்டும் என்று கூறுமளவிற்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறதாம்.

ஃபாராகான் புகழ்

ஃபாராகான் புகழ்

பிரபல இயக்குநரும், டான்ஸ் மாஸ்டருமான ஃபாராகான் தனது ப்ளாக்கில் தனுஷ் பற்றி புகழ்ந்து தள்ளியிருக்கிறார். திரைக்கு ஏற்ற கதாநாயகன் தனுஷ். அழகான எளிமையான நடிகர் என்று கூறியுள்ளார்.

ஸ்ரீதேவியின் டுவிட்டரில்

ஸ்ரீதேவியின் டுவிட்டரில்

பாலிவுட் முன்னாள் கனவுக்கன்னி ஸ்ரீதேவி தனது டுவிட்டரில், மிகவும், கூலாகவும், சக்தியோடும் நடித்திருக்கிறார் தனுஷ் என்று கூறியுள்ளார்.

தேசிய விருது

தேசிய விருது

ஆடுகளம் படத்தில் எளிமையான நடிப்பிற்காக தேசிய விருது வாங்கிய தனுஷ் ராஞ்சனாவில் நடித்ததன் மூலம் வட இந்திய பெண்களின் மனதை கொள்ளையடித்துவிட்டார் என்றே கூறுகின்றன ஊடகங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X