தனுஷின் “கேப்டன் மில்லர்“ தெறிக்கவிடப்போகுது.. ட்ரெண்டாகும் போட்டோ !

சென்னை : நடிகர் இயக்குநர் அருண் மாதேஸ்வரனுடன் இணையும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், நானே வருவேன் படத்தில் நடித்து வரும் நடிகர் தனுஷ். இதைத் தொடர்ந்து தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும், ஒரே நேரத்தில் தயாராகும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தை தோழி ப்ரேமா, ரங் தே உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கட் அட்லுரி இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்துக்கு தமிழில் வாத்தி என்றும், தெலுங்கில் சார் என்றும் தலைப்பிடப்பட்டுள்ளது.

Dhanush in Captain Miller New photos viral on social media

மேலும் ராக்கி, சாணி காயிதம் படங்களை இயக்கிய இளம் டைரக்டர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். தனுஷின் தொடரி, பட்டாஸ், மாறன் படங்களை தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் தான் இந்த படத்தையும் தயாரிக்க உள்ளதாம். இந்த படம் 1930 களில் நடப்பதை போன்ற கதையாம். வரலாற்று ஆக்ஷன் அட்வன்சர் படமாக தயாராக உள்ள இந்த படம் பான் இந்தியன் படமாக உருவாக்கப்பட உள்ளது. இந்த படத்திற்கு கேப்டன் மில்லர் என டைட்டில் வைத்துள்ளார்களாம். தமிழ் சினிமா வரலாற்றிலேயே யாரும் தொடாத ஒரு கதையாக இந்த படம் இருக்கும் என கூறப்படுகிறது.

கேப்டன் மில்லர் படத்தில் படத்தில் கேங்ஸ்டர் கதை எனவும், இப்படத்தில் இரண்டு வித்தியாசமான தோற்றத்தில் தனுஷ் நடிக்கிறார். மலையாள நடிகர் விநாயகன் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் தனுஷ் நடித்து வரும் நானே வருவேன், திருச்சிற்றம்பலம் படங்களின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. தனுஷ் நடித்த ஹாலிவுட் படமான தி கிரே மேன் படமும் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸாக உள்ளது.

Dhanush in Captain Miller New photos viral on social media

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X