சர்வதேச திரைப்பட விழா… தனுஷூக்கு கிடைத்த மற்றொரு விருது.. குவியும் வாழ்த்து !
கோவா : இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.
இதனை, தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் இதனை வைரலாக்கி கொண்டாடி வருகிறார்கள்.
மேலும் பலர் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களையும் தனுஷுக்கு தெரிவித்து வருகிறார்கள்.

இந்திய சர்வதேச திரைப்பட விழா
கோவாவில் 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கடந்த 20ந் தேதி தொடங்கியது. இதில்,இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இவ்விழாவை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகமும் கோவா மாநில அரசும் இணைந்து நடத்து கின்றன. 8 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இவ்விழா இன்றுடன் முடிகிறது.

சிறந்த நடிகர்
மிக பிரமாண்டமாக நடைபெறும் இந்த திரைப்பட விழாவில் ஒவ்வொரு ஆண்டும், பல மொழி படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் திரையிடப்படும் அந்த வகையில் , நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2019ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற அசுரன் படம் திரையிடப்பட்டது இதில், சிறப்பாக நடித்த தனுஷுக்கு சிறந்த (ஆண்) நடிகருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

ரசிகர்கள் மகிழ்ச்சி
அசுரன் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை தனுஷ் பெற்றுள்ள நிலையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளதால்,தனுஷின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் தனுஷூக்கு வாழ்ந்து கூறி வருகின்றனர்.

சிறப்பு அழைப்பாளர்
இந்த சர்வதேச படவிழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகை சமந்தா கலந்து கொண்டு உரையாற்றினார். இதன் மூலம் கோவா சர்வதேச பட விழாவில் உரையாற்றும் முதல் தென்னிந்திய நடிகை என்கிற சிறப்பையும் இவர் பெற்றார்.

கூழாங்கல்
இந்த சர்வதேச திரைப்பட விழாவில், வினோத் ராஜ் இயக்கிய கூழாங்கல் திரைப்படம் திரையிடப்பட்டது. அதேபோல, குறும்படங்களின் பட்டியலில் ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கிய ஸ்வீட் பிரியாணி இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











