மாமனாரும், மருமகனும் அரசியல் பேச மாட்டாங்களாம்
சென்னை: மாமனார் ரஜினியை போன்றே அரசியல் பேச மறுத்துள்ளார் மருமகன் தனுஷ்.
மாரி 2 படத்தை அடுத்து அசுரன் படத்தில் நடிக்கிறார் தனுஷ். தற்போது அந்த படத்திற்கான கெட்டப்பிற்கு மாறியுள்ளார். அவர் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார்.
அவர்களுடன் நடிகர் ஸ்ரீகாந்த் அவரின் மனைவி வந்தனாவும் சாமி தரிசனம் செய்தனர்.

தனுஷ்
தனுஷை பார்த்த செய்தியாளர்கள் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி கேள்வி எழுப்பினார்கள். அரசியல் பற்றி ரஜினியே அறிவிப்பார். சாமி கும்பிட வந்துள்ளேன். நான் அரசியல் பேச மாட்டேன் என்று தெரிவித்தார் தனுஷ்.

மாமா
மாமா எவ்வழியோ, மருமகன் தனுஷும் அவ்வழியே. முக்கிய நிகழ்வுகள் குறித்து கேட்டால் கட்சி துவங்கவில்லை அதனால் நான் அரசியல் பேச மாட்டேன் என்கிறார் ரஜினி. தனுஷும் அதையே தான் கூறியுள்ளார். தனுஷ் அரசியல் பேச மாட்டேன் என்பதை குறை கூற முடியாது.

படங்கள்
அரசியல் கட்சி துவங்குகிறேன் என்று ரஜினிகாந்த் அறிவித்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இந்நிலையில் அவர் கட்சி துவங்க மாட்டார் என்று ஒரு கோஷ்டி கூறிக் கொண்டிருக்கிறது. அவர் வேறு அடுத்தடுத்து புதுப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகிக் கொண்டிருக்கிறார். வருவார் ஆனால் வர மாட்டார் என்ற பேச்சுக்கு அவர் முற்றுப்புள்ளி வைக்கும் காலம் எப்பொழுது வரும் என்று தெரியவில்லை.

சத்யஜோதி
தனுஷ் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க உள்ளார். விஸ்வாசம் பட ரிலீஸை அடுத்து தனுஷ் படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது சத்யஜோதி என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











