முதியவரை தள்ளிவிட்ட பாதுகாவலர்.. கண்டுகொள்ளாமல் சென்ற தனுஷ்.. அதிர்ச்சி தரும் வீடியோ
சென்னை: தனுஷ் கடைசியாக நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இதனையடுத்து அவர் தனது 50ஆவது படமான ராயன் படத்தை இயக்கியும், நடித்தும் முடித்தார். அந்தப் படத்தை முடித்த கையோடு சேகர் கம்முல்லா இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு குபேரா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதன் பெயரும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்தச் சூழலில் ஒரு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் தனுஷ். அவர் கடைசியாக கேப்டன் மில்லர் படத்தில் நடித்தார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான அந்தப் படம் கோயில் நுழைவு போராட்டத்தையும், சாதிய ஏற்றத்தாழ்வையும், வெள்ளைக்காரர்கள் ஆட்சிக்காலத்தையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. முக்கியமாக கேப்டன் மில்லருக்கு போட்டியாக களமிறங்கிய சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் பொங்கல் ரேஸில் பந்தயம் அடித்தது.

தனுஷ் அப்செட்: தன்னால் அறிமுகப்படுத்தப்பட்ட ஹீரோவிடமே தோற்றுவிட்டோமே என்று தனுஷ் கொஞ்சம் அப்செட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க கேப்டன் மில்லர் படத்துக்கு அடுத்ததாக அவர் தனது 50ஆவது படத்தில் நடித்திருக்கிறார். அதனை அவரே இயக்கவும் செய்திருக்கிறார். படத்துக்கு ராயன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. நிச்சயம் இந்தப் படத்தை மெகா ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் இருக்கிறார். படத்தில் பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படம் அடுத்த மாதம் ரிலீஸாகிறது.
அடுத்த படம்: ராயன் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே சேகர் கம்முல்லாவின் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார் தனுஷ். ஏற்கனவே வாத்தி படத்தில் நடித்து கையில் சூடுபோட்டுக்கொண்ட அவர் மீண்டும் ஏன் தெலுங்கு இயக்குநருடன் கைகோர்க்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வருத்தப்பட்டனர். ஆனால் வாத்தி படத்தில் விட்டதை இந்தப் படத்தில் பிடித்து தெலுங்கில் தனக்கென தனி மார்க்கெட்டை நிலைநாட்டும் நோக்கத்தில் அவர் இருக்கிறார் என திரைத்துறையில் பேச்சு ஓடுகிறது.

குபேரா: படத்தின் பெயரும், ஃபர்ஸ்ட் லுக்கும் சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதன்படி படத்துக்கு குபேரா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் தனுஷ் தாடியும், தம்பட்டையுமாக பிச்சைக்காரர் போல் இருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் தனுஷின் கெட்டப்பே வேற மாதிரி இருக்கிறதே. அப்போ கதை எப்படி இருக்கும் என்று சமூக வலைதளங்களில் ஆர்வத்தோடு பேச ஆரம்பித்தனர். படத்தில் தனுஷுடன் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
அதிர்ச்சி தரும் வீடியோ: இந்நிலையில் குபேரா படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள செல்வதற்காக தனுஷ், நாகார்ஜுனா உள்ளிட்டோர் விமான நிலையத்துக்கு சென்றனர். அப்போது விமான நிலையத்தில் பணி செய்யும் முதியவர் ஒருவர் நாகார்ஜுனாவின் அருகில் சென்றார். அந்த சமயத்தில் அங்கிருந்த பாதுகாவலர் ஒருவர் அந்த முதியவரை முரட்டுத்தனமாக இழுத்ததில் அந்த முதியவர் கீழே விழுந்தார். இதனை நாகார்ஜுனாவும், தனுஷும் கண்டும் காணாதது மாதிரி சென்றுவிட்டனர். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், நாகார்ஜுனாவும், தனுஷும் என்ன கடவுளா. தங்கள் கண் எதிரே ஒரு முதியவர் கீழே விழுகிறார்; சிறு பதற்றம்கூட இல்லாமல் செல்கிறார்களே என்று காட்டமாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











