மீண்டும் படம் இயக்கும் தனுஷ்: ஹீரோ யார் தெரியுமா?
Recommended Video

சென்னை: மீண்டும் ஒரு படத்தை இயக்க தயாராகிவிட்டாராம் தனுஷ்.
நடிகர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர், பாடகராக இருந்த தனுஷ் ப. பாண்டி படம் மூலம் இயக்குனர் ஆனார். ப. பாண்டி படத்தில் ராஜ்கிரண் ஹீரோவாக நடித்தார்.
தொடை தெரிய வேட்டிக் கட்டி நடித்து வந்த ராஜ்கிரணை ஜீன்ஸ், டி சர்ட் போட்டு மாடர்னாக காட்டியிருந்தார் தனுஷ்.

பாராட்டு
ப. பாண்டி படத்தை பார்த்தால் அது தனுஷ் இயக்கிய முதல் படம் என்றே கூற முடியாத அளவுக்கு நன்றாக இருந்தது. ரிலாக்ஸ் செய்ய வேண்டும் என்று நினைக்கும் போது எல்லாம் பார்க்கும்படியான படமாக ப. பாண்டி அமைந்துவிட்டது.

தனுஷ்
அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டாராம் தனுஷ். ப. பாண்டி படத்தில் பிளாஷ்பேக்கில் மட்டுமே வந்த தனுஷ் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க முடிவு செய்துள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது.

எதிர்பார்ப்பு
தனுஷின் படத்தில் யார் ஹீரோயினாக நடிக்கப் போகிறார்களோ தெரியவில்லை. ப. பாண்டியை போன்றே இந்த படமும் நிச்சியம் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெருமை
ஹாலிவுட் படத்தில் நடித்த தனுஷ் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு சிவப்புக் கம்பளத்தில் நடந்தார். இவன்லாம் ஹீரோவாக நடிக்க வந்துட்டான் என்று விமர்சனம் எழுந்ததை கேட்டு கண் கலங்கிய அதே தனுஷ் தான் இன்று அசத்தி வருகிறார். வாழ்த்துக்கள் தனுஷ்.


Click it and Unblock the Notifications











