ரஜினியை ஈசியா இம்பிரஸ் பண்ணிடலாம், ஆனால் ஐஸ்வர்யாவை முடியாது: தனுஷ்
சென்னை: தனது மனைவி ஐஸ்வர்யாவை விட மாமனார் ரஜினிகாந்தை இம்பிரஸ் பண்ணுவது எளிது என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.
தனுஷ் முதன் முதலாக இந்தி படத்தில் நடித்துள்ளார். சோனம் கபூருடன் அவர் ஜோடி சேர்ந்துள்ள படம் ராஞ்ஜனா. இந்த படத்திற்கு தனுஷ் தானே டப்பிங்க பேசி அசத்தியுள்ளார். ஆனந்த் எல் ராய் இயக்கியுள்ள இப்படம் வரும் ஜூன் மாதம் 24ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் படம் குறித்தும், தனது குடும்பம் குறித்தும் தனுஷ் மனம் திறந்துள்ளார்.

ரஜினியை ஈசியா இம்பிரஸ் பண்ணிடலாம்
தனது மாமனார் ரஜினிகாந்த் நல்ல மனிதர் என்றும், அவரை எளிதில் இம்பிரஸ் பண்ணிவிடலாம் என்றும் தனுஷ் தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யாவத் தான் கஷ்டம்
மனைவி ஜஸ்வர்யாவை இம்பிரஸ் பண்ணுவது கஷ்டம் என்று தனுஷ் தெரிவித்துள்ளார். மனைவியை இம்பிரஸ் பண்ண இன்னும் முயற்சித்துக் கொண்டே இருக்கிறாராம்.

என் லுக்க வச்சு கஷ்டம்
தன் லுக்க வைத்து பெண்களை இம்பிரஸ் பண்ணுவது அவ்வளவு எளிதில்லை என்று கூறினார் தனுஷ்.


Click it and Unblock the Notifications











