»   »  என்னால முடிஞ்சவரைக்கும் நடிக்கிறேன்... தனுஷ்!

என்னால முடிஞ்சவரைக்கும் நடிக்கிறேன்... தனுஷ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : ஷமிதாப் பட வாய்ப்பு கிடைத்ததன் மூலம் கடவுள் தன்னை ஆசிர்வதித்திருப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் தனுஷ்.

சீனிகம், பா உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய பால்கியின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், தனுஷ் நடித்துள்ள படம் ஷமிதாப். கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் இப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் அமிதாப் பச்சன், தனுஷ் உள்ளிட்ட ஷமிதாப் படக்குழுவினர் பங்கு பெற்றனர்.

பிம்பம்...

பிம்பம்...

இவ்விழாவில் நடிகர் தனுஷ் பேசுகையில், "தமிழில் என்னால் முடிந்த வரை விதவிதமான பாத்திரங்களில் நடிக்க முயற்சித்து வருகிறேன். ஆனால், அங்கு ஒரு பிம்பத்திற்குள் சிக்கிக் கொண்டதால் கட்டுப்பட்டு இருக்கிறேன்.

பரிசோதனை முயற்சி...

பரிசோதனை முயற்சி...

இங்கு பாலிவுட்டில் எனக்கு இழப்பதற்கென எதுவுமில்லை. அதனால், பரிசோதனை முயற்சியாக பாத்திரங்களை ஏற்று நடிக்கிறேன்.

பால்கிக்கு நன்றி...

பால்கிக்கு நன்றி...

இந்தப் படத்தில் என்னை நடிக்க வைத்ததற்காக பால்கிக்கு நன்றி. எனக்கு இங்கு இழக்க எதுவுமில்லை.

கடவுள் ஆசிர்வாதம்...

கடவுள் ஆசிர்வாதம்...

அமிதாப் பச்சனுடன் வேலை செய்தது அற்புதமான அனுபவம். அமிதாப்போடு நடிக்கும் அளவுக்கு எனக்கு தகுதி உள்ளதா எனத் தெரியவில்லை. கடவுள் இந்தப் படத்தைத் தந்ததன் மூலம் என்னை ஆசிர்வதித்துள்ளார்" என இவ்வாறு அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மேஜிக் மேன்...

மேஜிக் மேன்...

இந்த நிகழ்ச்சிக்கு அமிதாப் மற்றும் தனுஷ் இருவரும் மேஜிக் செய்பவர்களைப் போல கருப்பு நிற உடையணிந்து வந்திருந்தனர்.

English summary
At the trailer launch of their upcoming film Shamitabh, Amitabh Bachchan and Dhanush descended on stage dressed like magicians.
Please Wait while comments are loading...