Dhanush: 5வது 100 கோடி அடித்த தனுஷ்.. 6 நாளில் ’தேரே இஷ்க் மே’ சூப்பர் ரெக்கார்டு.. ஹாட்ரிக் வெற்றி!

சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் இந்தியில் வெளியான 'தேரே இஷ்க் மே' (Tere Ishk Mein) திரைப்படம் அதிரடியாக 6 நாட்களில் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

மேலும், நடிகர் தனுஷ் 5வது முறையாக 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளார் என்பது கூடுதல் சந்தோஷத்தை அவரது ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என தொடர்ந்து ஓடாக உழைத்து வருகிறார் தனுஷ்.

Dhanush joins 100 crore club for the 5th time with Tere Ishk Mein success at Box Office

வெற்றி, தோல்விகளை எல்லாம் பொருட்படுத்தாமல் சினிமாவில் தினமும் நடிக்க வேண்டும் என்றும் ஓய்வெல்லாம் வயதான காலத்தில் பொறுமையாக எடுத்துக் கொள்ளலாம் என அவர் உழைத்து வருவதே பலருக்கும் பெரிய இன்ஸ்பிரேஷனாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

100 கோடி வசூல்: ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் இந்தியில் தனுஷ் நடித்து முதல் முறையாக வெளியான ராஞ்சனா திரைப்படத்தின் மூலம் கடந்த 2013ம் ஆண்டு பாலிவுட்டில் 92 கோடி வசூலை சாத்தியமாக்கினார் தனுஷ். மீண்டும் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த தேரே இஷ்க் மே திரைப்படம் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. 6 நாட்களில் அதிரடியாக உலகளவில் தேரே இஷ்க் மே திரைப்படம் 100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் 92 கோடி ரூபாய் கிராஸ் வசூலை தேரே இஷ்க் மே ஈட்டிய நிலையில், ஓவர்சீஸில் 8 கோடி ரூபாய் வசூலுடன் சேர்த்து, 100 கோடி கிளப்பில் தேரே இஷ்க் மே இணைந்துவிட்டது.

Dhanush joins 100 crore club for the 5th time with Tere Ishk Mein success at Box Office

5வது படம்: ராஞ்சனாவில் கிடைத்த 92 கோடி வசூலை தற்போது 100 கோடியாக உயர்த்தி நடிகர் தனுஷ் 5வது முறையாக 100 கோடி சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளார். தமிழில் தனுஷுக்கு முதல் 100 கோடி ரூபாய் வசூலை கொடுத்த படம் என்றால் அது திருச்சிற்றம்பலம் தான். அந்த படத்தைத் தொடர்ந்து வாத்தி, ராயன், குபேரா உள்ளிட்ட படங்கள் 100 கோடி வசூலை ஈட்டின. தற்போது 5வது படமாக தேரே இஷ்க் மே இணைந்துள்ளது. ராஞ்சனா திரைப்படமே 100 கோடி வசூல் என சிலர் கூறுகின்றனர். ஆனால், அந்த படம் உலகளவில் 92 கோடி தான் வசூல் செய்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. கர்ணன், வேலையில்லா பட்டதாரி, அசுரன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்கள் 70 கோடி வரை வசூல் ஈட்டியுள்ளன.

Dhanush joins 100 crore club for the 5th time with Tere Ishk Mein success at Box Office

2025ல் ஹாட்ரிக் வெற்றி: நடிகர் தனுஷ் இந்த ஆண்டு நடித்த குபேரா திரைப்படம் அவருக்கு 100 கோடி வசூல் வேட்டையை பெற்றுத் தந்தது. அதனை தொடர்ந்து தமிழில் அவர் இயக்கி நடித்த இட்லி கடை திரைப்படம் 72 கோடி வரை வசூல் ஈட்டி படத்தின் பட்ஜெட்டை தாண்டி வெற்றிப் படமாக மாறியது. இந்நிலையில், ஹாட்ரிக் வெற்றியாக தேரே இஷ்க் மே 100 கோடி வசூலை 6 நாட்களில் கடந்துள்ளது. இந்த வாரம் இந்தியில் துரந்தர் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், பாலிவுட்டில் தொடர்ந்து 2வது வாரத்திலும் தனுஷ் கல்லா கட்டுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 200 கோடி வரை வசூலை ஈட்டுமா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X