இன்னும் எதுவுமே குறையல.. மீண்டும் இணைகிறார்களா தனுஷும், ஐஸ்வர்யாவும்?.. குட் நியூஸ் வருமா?
சென்னை: நடிகர் தனுஷ் கோலிவுட்டின் டாப் 10 நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான ராயன் படம் விமர்சன ரீதியாக அப்படி இப்படி பேசப்பட்டாலும் வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸையே பெற்றது. இப்போது சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துவரும் தனுஷ் ஹிந்தியிலும் கமிட்டாகியிருக்கிறார். இதற்கிடையே ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்ட அவர் இப்போது பிரிந்திருக்கிறார்.
தனுஷ் இப்போது கோலிவுட்டின் சிறந்த நடிகராக திகழ்ந்துவருகிறார். தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, ஹாலிவுட் ஆகியவைகளிலும் நடித்துவருகிறார். துள்ளுவதோ இளமை படத்தில் யாரெல்லாம் அவரை உருவ கேலி செய்தார்களோ அவர்கள் எல்லாம் இப்போது மூக்கின் மீது விரலை வைத்து பார்த்துவருகிறார்கள் தனுஷை. அந்த அளவுக்கு தனது திறமையை வளர்த்துக்கொண்டு தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிவைத்திருக்கிறார். நடிப்பு, இயக்கம், பாடல் எழுதுவது, பாடல் பாடுவது என கலக்குகிறார் தனுஷ்.

ராயன்: தனுஷின் நடிப்பில் கடைசியாக ராயன் படம் வெளியானது. அந்தப் படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார். தங்கை செண்ட்டிமெண்ட் என்ற பழைய அஸ்திவாரத்தை வைத்து ராயனை கட்டியிருந்தார் தனுஷ். படம் விமர்சன ரீதியாக பெரிதாக கொண்டாடப்படவில்லை. அதேசமயம் வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸை பெற்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.
வடசென்னை வாடை: குறிப்பாக படத்தின் ஸ்க்ரீன்ப்ளே ரொம்பவே சொதப்பிவிட்டதாக ரசிகர்கள் கூறுகிறார்கள். அதாவது படத்தின் பல இடங்களில் வடசென்னை படத்தின் வாடை ரொம்பவே அடித்ததாக குற்றஞ்சாட்டினர். அதேபோல் படத்தின் க்ளைமேக்ஸோ அப்படியே ஆடுகளம் படத்தின் க்ளைமேக்ஸை நினைவுப்படுத்தியதாகவும் கூறினார்கள். அதேசமயம் தனுஷ் ஒரு நடிகராக இதில் கலக்கிவிட்டார் என்று அவரது ரசிகர்கள் நிம்மதியடைந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிவு: இதற்கிடையே ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் தனுஷ். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் சில வருடங்களுக்கு முன் பிரிந்தனர். அதற்கு காரணமாக பல யூகங்கள் சொல்லப்படுகின்றன. மேலும் இருவரையும் இணைத்து வைக்க இருவீட்டார் முயன்றுவருவதாக ஒருதரப்பினரும்; சட்டப்பூர்வமாக விவாகரத்துக்கு அப்ளை செய்திருக்கிறார்கள் என்று ஒருதரப்பினரும் கூறிவருகிறார்கள்.
மீண்டும் சேர்கிறார்களா?: இந்நிலையில் ஐஸ்வர்யாவின் இன்ஸ்டாகிராமை பார்த்த பலரும் அவரும், தனுஷும் மீண்டும் இணைகிறார்களா என்ற கேள்வியை எழுப்பிவருகின்றனர். ஏனெனில் ஐஸ்வர்யா தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களையும், தனது புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் ஷேர் செய்திருந்தார். அந்தப் புகைப்படங்களுக்கு தனுஷ் லைக் செய்திருக்கிறார். இதனை கவனித்த ரசிகர்கள், இன்னும் தனுஷுக்கு ஐஸ்வர்யா மீது இருக்கும் காதலும், பாசமும் குறையவில்லை போல. கண்டிப்பாக இருவரும் இணைந்துவிட்டதாக நல்ல செய்தி விரைவில் வர வேண்டும் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











