சூப்பர் ஸ்டார், தல, தளபதி: யாரையும் விட்டு வைக்காத தனுஷ்
சென்னை: தனுஷ் ரஜினி, அஜீத், விஜய் ஆகியோரின் படங்களை ட்விட்டரில் புகழ்ந்து வருகிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் தனுஷ் என்று அனைவருக்கும் தெரியும். முன்பு சமயம் கிடைக்கும்போது ரஜினியை ஜாடைமாடையாக விமர்சனம் செய்து வந்தார் தனுஷ். ஆனால் தற்போது அந்த போக்கை மாற்றியுள்ளார்.
மேலும் எதிரி சிம்புவுடன் நட்பு பாராட்டி வருகிறார். சக நடிகர்களை மனதார பாராட்டுகிறார்.

கத்தி
விஜய்யின் கத்தி படத்தை பார்க்க ஆவலாக இருப்பதாக தனுஷ் ட்வீட் செய்தார். படத்தை பார்த்த பிறகு அது சூப்பர் என்று ட்விட்டரில் தெரிவித்தார்.

விஜய்
விஜய்யும், தனுஷும் ஒன்றாக பார்ட்டிக்கு செல்லும் அளவுக்கு நெருக்கமாகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லிங்கா
லிங்கா பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த தனுஷ் ட்விட்டரில், ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரே தலைவன் என்று தெரிவித்தார்.
என்னை அறிந்தால்
என்னை அறிந்தால்... அஜீத் சாருக்கு பொருத்தமான தலைப்பு :) பவர்புல் மாஸ் மற்றும் கிளாஸ் !! தனது தலைப்புகளால் கௌதம் மேனன் என்னை வியக்க வைக்க தவறியது இல்லை. வாழ்த்துக்கள் என்று தனுஷ் ட்வீட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











