கோட் சூட்ல சும்மா கெத்தா.. பிரபல வாட்ச் மேக்கர் JP Journe உடன் தனுஷ் சந்திப்பு.. குவியுது லைக்ஸ்!
சென்னை: ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் படம் எடுத்த ரூசோ சகோதரர்களே தனுஷின் நடிப்பை பார்த்து பாராட்டி தி கிரேமேன் படத்தில் நடிக்க வைத்தனர். அதன் அடுத்த பார்ட்டுக்கும் தனுஷுக்கான தனி சீக்வெலுக்காகவும் அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், சர்வதேசளவில் பிரபலமான வாட்ச் மேக்கர் ஜே.பி. ஜோர்ன் (JP Journe) உடன் நடிகர் தனுஷ் சந்தித்த நிலையில், எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
தமிழ்நாட்டைத் தாண்டி தெலுங்கு, இந்தி மற்றும் ஹாலிவுட் வரை நடிகர் தனுஷ் தனது ஆளுமையை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளார். பல பிரபலங்களை அசால்ட்டாக சந்திக்கும் வாய்ப்பும் அந்த பிரபலங்களுக்கும் தனுஷை தெரிந்திருக்கும் விஷயம் தான் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது.

கடந்த மாதம் தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே கடும் சண்டை வெடித்தாலும், வழக்கம் போல தனுஷ் நயன்தாராவின் அறிக்கையை பொதுவெளியில் பேசாமல் சட்ட ரீதியாகவே டீல் செய்து வருகிறார்.
தனுஷ் ஒரு சைக்கோ: அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காணும் நபர் தான் தனுஷ். ஓம் நமச்சிவாயா என சொல்லி வெளியே நல்லவர் போல வேஷம் போட்டாலும் உள்ளுக்குள் மொத்தமும் விஷம் தான் என 3 பக்கத்துக்கு நடிகை நயன்தாரா தனுஷ் குறித்து கன்னா பின்னாவென எழுதிய அறிக்கையை இன்ஸ்டாகிராமில் வெளியிட பெரிய சர்ச்சை வெடித்தது. நயன்தாராவின் கருத்தை ஆதரித்து தனுஷ் உடன் நடித்த நடிகைகளான பார்வதி, அனுபமா பரமேஸ்வரன், நஸ்ரியா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் லைக் போட்டதும் சர்ச்சையை மேலும் பெரிதாக்கியது.
சைலன்ட்டாக சம்பவம்: ஆனால், நடிகர் தனுஷ் பொதுவெளியில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பற்றி எந்தவொரு அவதூறு கருத்தையும் தெரிவிக்காமல் தனது அனுமதியின்றி தன்னுடைய தயாரிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளை ஆவணப்படத்தில் பயன்படுத்தியுள்ளார் என்றும் அதற்கு நஷ்ட ஈடாக 10 கோடி ரூபாய் தர வேண்டும் என வழக்குத் தொடர்ந்துள்ளார்.

ஒரே ஃபிரேமில் தனுஷ் - நயன்தாரா: விக்னேஷ் சிவனின் உதவி இயக்குநரும் தனுஷின் இட்லி கடை படத்தின் தயாரிப்பாளருமான ஆகாஷ் பாஸ்கரன் திருமண விழாவில் தனுஷ் மற்றும் நயன்தாரா இருவரும் பங்கேற்றது மற்றும் தனுஷ் மற்றும் நயன்தாரா இருவரும் ஒரே ஃபிரேமில் அமரந்து போஸ் கொடுத்தது என ஏகப்பட்ட அலப்பறைகள் அரங்கேறின. சிம்பு மற்றும் தனுஷ் திருமண வரவேற்பில் கட்டிப் பிடித்துக் கொண்டு கொடுத்த போஸும் டிரெண்டானது.
வாட்ச் மேக்கருடன் தனுஷ்: சமீபத்தில் அம்ரித் ரத்னா விருதை வென்ற தனுஷ் தற்போது விலையுயர்ந்த வாட்ச்களை தயாரித்து வரும் ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த பிரபல வாட்ச் மேக்கர் JP Journe உடன் நடத்திய சந்திப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஜேபி ஜோர்ன் வாட்ச்கள் 80 லட்சத்துக்கும் அதிக விலையில் எல்லாம் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது. ப்ளூ கலர் கோட் சூட்டில் சும்மா கெத்தாக தனுஷ் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து, இத்தனை பெரிய ஜாம்பவானை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது ரொம்பவே மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார். தனுஷ் நடிப்பில் இட்லி கடை, குபேரா, இந்தி படம் மற்றும் அமரன் இயக்குநர் படம் என பல படங்கள் உருவாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











