ஹீரோ .. ஹீரோ ..

By Staff

இளைஞர்களின் நாயகனாக குறுகிய காலத்தில் அவர்களின் இதயத்தில் இடம் பிடித்துள்ள நடிகர் தனுஷ் வரும்20ம் தேதி வரை புதிய படங்களில் நடிக்கக் கூடாது, புதிய படம் எதையும் ஒப்புக் கொள்ளக் கூடாது என்றுசென்னை நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து இன்று நடக்க இருந்து பாலுமகேந்திராவின் அது ஒரு கனாக் காலம் சூட்டிங் ரத்துசெய்யப்பட்டுவிட்டது.

அமெக்காவைச் சேர்ந்த ரூபஸ் பார்க்கர் என்பவர் தனுஷை வைத்து ராகவா என்ற படத்தைத் தயாரிக்கத்திட்டமிட்டிருந்தார். ஆனால் இப் படத்தில் நடிக்க கூடுதல் பணத்தை எதிர்பார்த்த தனுஷ் நடிக்க மறுத்து தொல்லைதந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து ரூபஸ் பார்க்கர் மற்றும் இயக்குநர் சிபிச்சக்கரவர்த்தி ஆகியோர் சென்னைசிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

அதில்,ராகவா படத்தில் நடிப்பதாகக் கூறி விட்டு தற்போது தனுஷ் நடிக்க மறுக்கிறார். எனவே அவர் எனதுபடத்தில் நடிக்காமல் வேறு படத்தில் நடிக்கக் கூடாது என்று உத்தரவிடக் கோரினார்.

மனுவை விசாரித்த நீதிபதி சோமசேகரன் வரும் 20ம் தேதி வரை தனுஷ் புதிய படங்களை ஒப்புக் கொள்ளவோ,புதிய படங்களின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளவோ கூடாது என்று கூறி இடைக்காலத் தடை விதித்துஉத்தரவிட்டார். மேலும் இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தனுஷுக்கு நோட்டீஸ் அனுப்பவும்உத்தரவிட்டார்.

இதனால் அது ஒரு கனாக்காலம், ஓடிப் போலாமா, உனக்கே உயிரானேன், சுள்ளான் ஆகிய படங்களில் தனுஷ்நடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவுப்படி இன்று நடக்க இருந்து அது ஒரு கனாக் காலம் சூட்டிங்கை ரத்து செய்துவிட்டார்பாலுமகேந்திரா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X