நாகர்ஜுனாவை இயக்கும் தனுஷ்

நடிகர் தனுஷ் அடுத்த படம் இயக்குவதாக கூறப்படுகிறது.

சென்னை: நடிகர் தனுஷ் அடுத்து இயக்க உள்ள படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நான் நடிகன், நடிக்கத் தான் வந்தேன் என ஒரு வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் இயக்குனர் என தடம் பதிப்பவர் தனுஷ். சினிமாவில் எல்லாமுமாக இருப்பேன் என்ற கொள்கையோடு செயல்படுகிறார்.

Dhanush next direction

தனுஷ் நடிகராக சாதித்து விடுவாரா என ஆரம்ப காலங்களில் எப்படி சிலாகிக்கப்பட்டதோ அப்படியே, அவர் முதல் படத்தை இயக்குகிறார் என்ற தகவல் வந்ததும் பேசப்பட்டது. அதையெல்லாம் சுக்கு நூறாக்கி பேசியவர்களின் வாய்க்கு பவர் பாண்டி திரைப்படம் மூலம் பிளாஸ்த்ரி போட்டார். ஐம்பது வயதைத் தாண்டிய காதல் எத்தகையது... எவ்வளவு அழகானது என எடுத்துரைத்த விதம் பாராட்டப்பட்டது.

இப்போது இரண்டாவதாக மற்றுமொரு படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் லோகேஷன் பார்த்த பிறகு, இன்று படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் நாகர்ஜுனா, நான் ஈ பட புகழ் கிச்சா சுதீப் மற்றும் பலர் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை.

தனுஷுக்கு அடுத்ததாக வடசென்னை திரைப்பம் ரிலீஸ் ஆக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X