நீங்க இப்படி பண்ண கூடாது.. உடனே மாத்துங்க.. தனுஷுக்கு ஏற்பட்ட பிரச்சனை.. சிக்கலோ சிக்கல்!

Recommended Video

Asuran - 'ஆமா வடசென்னை படத்துக்கு NATIONAL AWARD வரலன்னு வருத்தமா இருக்கு'!-

சென்னை: நடிகர் தனுஷ் நடிக்கும் அடுத்த படத்திற்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. படம் தொடங்குவதற்கு முன்பே அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். வடசென்னை படம் பெரிய அளவில் ஹிட் கொடுத்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

அதேபோல் அசுரன் படமும் வேகமாக தயாராகிவிட்டது. இதன் டிரைலர் வெளியாகி யூ டியூபில் டிரெண்டாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்து என்ன

அடுத்து என்ன

இந்த நிலையில் வடசென்னை பாகம் 2விற்கான பணிகளில் வெற்றிமாறன் இறங்கி உள்ளார். வடசென்னை பாகம் 2 முழுக்க முழுக்க தனுஷை மையமாக வைத்து இருக்குமாம். இதனால் அதன் கதையை மிகவும் கவனமாக வெற்றிமாறன் தயாரித்துக் கொண்டுள்ளார்.

அதற்கு முன் என்ன

அதற்கு முன் என்ன

இந்த படத்திற்கு முன் தனுஷ் வேறு ஒரு இயக்குனரின் கீழ் நடிக்க இருக்கிறார். பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்தான் தனுஷ் நடிக்க உள்ளார். பல்வேறு நாடுகளில் இந்த படம் எடுக்கப்பட உள்ளது. இந்த படத்தின் கதை நீண்டதாக இருக்கும் என்கிறார்கள்.

எப்படி திட்டம்

எப்படி திட்டம்

இதனால் லண்டன், அமெரிக்கா ஆகிய இடங்களில் ஷூட்டிங் ஸ்பாட் பார்த்துள்ளனர். திரில்லர் ஜானரில் இந்த படம் உருவாக்கப்பட உள்ளது. இதில் பிரபல ஹாலிவுட் சினிமா நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ வில்லனாக நடிக்க உள்ளார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இந்த படம் தொடங்குவதற்கு முன்பே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த படத்திற்கு உலகம் சுற்றும் வாலிபன் என்று தலைப்பு வைத்துள்ளனர். இதற்கு பழைய எம்ஜிஆர் பட இயக்குனரோ, தயாரிப்பாளரே கோபம் அடையவில்லை, எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

யார் எதிர்ப்பு

யார் எதிர்ப்பு

ஆனால் 1973 வெளியான உலகம் சுற்றும் வாலிபன் மீண்டும் டிஜிட்டல் முறையில் அடுத்த வருடம் வெளியாக உள்ளது. இந்த படத்தை டிஜிட்டலில் வெளியிடும் பணியை தயாரிப்பாளர் சாய் நாகராஜன் செய்து வருகிறார். இவர்தான் தனுஷ் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மாட்டேன்

மாட்டேன்

நான் ஏற்கனவே இந்த படத்தின் தலைப்பை பதிவு செய்துவிட்டேன். தனுஷ் இப்படி செய்ய கூடாது. அவர் உடனே தனது படத்தின் பெயரை மாற்ற வேண்டும். இல்லையென்றால் அவர் சிக்கலை சந்திக்க நேரிடும், என்று சாய் நாகராஜன் பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X