யாருடைய நன்றியும் தேவையில்லை.. சிவகார்த்திகேயனுக்கு பதிலடி கொடுத்த தனுஷ்?.. பஞ்சாயத்து நீளுதே

சென்னை: தனுஷ் தனது 50ஆவது படமான ராயன் படத்தை இயக்கியும், நடித்தும் முடித்தார். படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இருந்தாலும் அந்தப் படம் வசூலில் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. அந்தப் படத்தை முடித்த கையோடு சேகர் கம்முல்லா இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு குபேரா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஹிந்தி மற்றும் ஹாலிவுட்டிலும் அவர் நடிக்கவிருக்கிறார்.

இந்திய அளவில் திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவர் தனுஷ். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அசால்ட்டாக சம்பவம் செய்யும் அவர் ராயன் படத்துக்கு முன்னதாக கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் வழக்கம்போல் தனுஷ் தனது கேரக்டரை மிகச்சிறப்பாக செய்தார். ஆனால் தனுஷ் ரசிகர்களுக்கு சோகம் என்னவென்றால்; போட்டியாக களமிறங்கிய அயலான் திரைப்படத்திடம் கேப்டன் மில்லர் தோற்றதுதான். இருந்தாலும் மில்லரில் விட்டதை அடுத்த படத்தில் அவர் பிடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

Sivakarthikeyan Dhanush Kottukkaali

ராயன்: அதன்படி அவர் தனது 50ஆவது படமாக ராயன் படத்தை இயக்கி நடித்தார். சில வாரங்களுக்கு முன்பு வெளியான அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. அதேசமயம் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டிருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. அதேசமயம் தான் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கவில்லை என தனுஷ் கொஞ்சம் அப்செட்டாகியிருப்பதாகவும் கோலிவுட்டில் பேச்சு எழுந்திருக்கிறது.

சர்ச்சை: அதேபோல் தனுஷ் மீது சமீபகாலமாகவே பலர் சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுக்களை வைத்துவருகிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் தனுஷ் ரெஸ்பான்ஸ் செய்யவில்லை.மாறாக தன்னுடைய வேலை என்னவோ அதை பற்றி மட்டுமே கவனம் செலுத்திவருகிறார். இப்படிப்பட்ட சூழலில் அவர் குறித்து தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியிருக்கும் விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

தனுஷின் அறிமுகங்கள்: இதற்கிடையே பலரை சினிமாவில் அறிமுகப்படுத்தியது தனுஷ்தான். நடிகர் சிவகார்த்திகேயன், தீனா, இசையமைப்பாளர் அனிருத் என அந்த லிஸ்ட் நீண்டுகொண்டே செல்லும்.மேலும் வெற்றிமாறன் மீது பெரும் நம்பிக்கையை வைத்து அவர் இயக்கும் முதல் படத்துக்கு தனது கால்ஷீட்டை கொடுத்தார் தனுஷ். அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயனை வைத்து படத்தையும் தயாரித்திருக்கிறார் தனுஷ். இதனால் அவரை பலரும் பாராட்டவும் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் பேச்சு: சூழல் இப்படி இருக்க சிவகார்த்திகேயனுக்கும் தனுஷுக்கும் இடையே பிரச்னை என்று பேசப்படுகிறது. இந்தச்ச் ஊழலில் இன்று நடைபெற்ற கொட்டுக்காளி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் பேசிய சிவா, "யாரையும் கண்டுபிடித்து; இவருக்கு நான்தான் வாழ்க்கை கொடுத்தேன்; நான்தான் ரெடி செய்தேன் என்றெல்லாம் சொல்லமாட்டேன். ஏனென்றால் நான்தான் வாழ்க்கை கொடுத்தேன் என்று என்னை அப்படி சொல்லி சொல்லியே பழக்கிவிட்டார்கள். அப்படிப்பட்ட ஆள் எல்லாம் நான் இல்லை. இதோ எனது நண்பர் இவர்தான் என்று ஒரு அறிமுகம் செய்வோம் இல்லையா. அப்படித்தான் இதனை நான் செய்கிறேன். நீங்கள் கொடுத்த நடிகர் என்ற இடத்திலிருந்து அதை சரியாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்" என்றார்.

தனுஷின் பதிலடி: அவரது இந்தப் பேச்சு தனுஷைத்தான் குறிக்கிறது என்று ரசிகர்கள் பேச ஆரம்பித்தனர். மேலும் தனுஷின் ரசிகர்கள் சிவாவையும் கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கியிருக்கின்றனர். இந்நிலையில் தனுஷ் ரசிகர்கள் ஒரு வீடியோவை அதிகம் ஷேர் செய்துவருகின்றனர். சில வருடங்களுக்கு தனுஷ் அளித்திருந்த பேட்டியில், "யாரும் என்னிடம் நன்றியாக இருக்க வேண்டும் என்று நினைத்து நான் எந்த உதவியையும் செய்யவில்லை. அப்படி யாரும் யாருக்கும் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை" என்றிருந்தார். இதனை ஷேர் செய்து, சிவகார்த்திகேயனுக்கு அப்போவே தனுஷ் பதிலடி கொடுத்துவிட்டார் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X