விஜய்யுடன் நடித்துதான் புகழடைய வேண்டும் என்பதில்லை.. சொல்லி அடித்த தனுஷ்.. யப்பா வேற லெவல்
சென்னை: தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் வெளியான தேரே இஷ்க் மெய்ன், இட்லி கடை, குபேரா ஆகிய படங்களில் இட்லி கடை மட்டும்தான் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. அடுத்ததாக போர்த்தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர படத்தில் நடித்திருக்கிறார். மேலும் மாரி செல்வராஜ், தமிழரசன் பச்சமுத்து ஆகியோரின் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் அவரது வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ் நடிப்பு, இயக்கம், பாடல்கள் பாடுவது, எழுதுவது என பல திறமைகளை கொண்டிருக்கிறார். இரண்டு முறை தேசிய விருதுகளையும் அள்ளியிருக்கிறார். இந்திய அளவில் சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றிருக்கும் அவருக்கு கடந்த சில வருடங்களாகவே பெரிய வெற்றி படங்கள் எதுவும் அமையவில்லை. மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அவர் நடித்த திருச்சிற்றம்பலம் படம்தான் சொல்லிக்கொள்ளும்படியான ஹிட்டை கொடுத்தது.
மூன்று படங்களும் சுமார்தான்: கடந்த வருடத்தில் மட்டும் மூன்று படங்களில் நடித்தார். தேரே இஷ்க் மெய்ன், இட்லி கடை, குபேரா ஆகிய படங்கள்தான் அவை. மூன்று படங்களில் இட்லி கடை படத்தை அவரே இயக்கியிருந்தார். அது மட்டும்தான் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. அதேசமயம் அந்தப் படத்தின் கதை குல தொழிலை ஆதரிக்கும் வகையில் அமைந்துவிட்டதாகவும் ஒரு விமர்சனம் ஓடியது. ஆனாலும் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தனுஷுக்கு அப்படம் நிம்மதியை கொடுத்ததாகவே தெரிகிறது.

அடுத்த படங்கள்: இப்போது அவர் போர்த்தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர படத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில்தான் படத்தின் பெயரோடு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், வீடியோ எல்லாம் வந்தன. வழக்கம்போல் தனுஷ் இப்படத்திலும் தரமான நடிப்பை கொடுத்திருப்பார் என்பது அதனை பார்க்கையில் தெரிகிறது. இந்தப் படத்துக்கு பிறகு மாரி செல்வராஜ், தமிழரசன் பச்சமுத்து, ராஜ்குமார் பெரியசாமி ஆகியோரின் இயக்கத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.
தனுஷ் வாழ்க்கையில் நடந்தது: இப்படி படு பிஸியாக இருக்கும் தனுஷ் தனது கரியரின் ஆரம்பத்தில் தெளிவான நோக்கத்துடன் இருந்தது தெரியவந்திருக்கிறது. அதாவது விஜய்யை வைத்து வெங்கடேஷ் இயக்கிய படம் பகவதி. அந்தப் படத்தில் ஜெய்தான் விஜய்க்கு தம்பியாக நடித்திருப்பார். ஆனால் அந்த ரோலில் முதலில் தனுஷை நடிக்க வைக்கத்தான் விரும்பினாராம் வெங்கடேஷ். துள்ளுவதோ இளமை படம் வந்த சமயத்தில் தனுஷிடம் கதை சொல்ல விரும்பினாராம் வெங்கடேஷ். பகவதி தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மேக்கர்ஸ் செய்த ஏற்பாட்டின்பேரில் தனுஷையும் சந்தித்தாராம். அப்போது விஜய்யின் தம்பி கேரக்டரில் நடிக்கத்தான் பகவதி கதையை கேட்கிறோம் என தெரியாமல் தனுஷ் கேட்டிருக்கிறார்.
அது வந்தாலே போதும்: கதையை கேட்டு முடித்துவிட்டு இதில் நான் என்ன செய்கிறேன் என கேட்க; தம்பி கேரக்டர்தான் இதில் செய்கிறீர்கள் அதற்காகத்தான் கதை சொல்ல வர சொன்னேன் என வெங்கடேஷ் சொல்ல; இல்லை என்னிடம் அப்படி சொல்லவில்லை நீங்கள் கதை சொல்வதாக ம்ட்டும்தான் சொன்னார்கள் என சொல்லிவிட்டு; நான் தம்பி கேரக்டர் எல்லாம் செய்வதில்லை என கூறினாராம். இருந்தாலும் அவரை எப்படியாவது சமாதானம் செய்துவிடலாம் என்று நினைத்த இயக்குநரோ, 'நீங்கள் மட்டும் இதில் நடித்தீர்கள் என்றால் விஜயகாந்த்தோடு நடித்து விஜய் எப்படி பி&சி சென்ட்டர்களில் இறங்கினாரோ அதேபோல் நீங்களும் இறங்கலாம்' என சொன்னாராம். அதற்கு தனுஷோ, 'காதல் கொண்டேன் படம் வந்தாலே நான் பி&சி இறங்கிவிடுவேன்' என உறுதியாக கூறினாராம். அப்போதே தெளிவான நோக்கத்துடன் இருந்து சொல்லி அடித்திருக்கிறார் தனுஷ்.


Click it and Unblock the Notifications











